Skip to main content

இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், ஹற்றன் நேஷனல் வங்கி மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் (இங்கு பின்னர் வரையறுக்கப்பட்டுள்ளவாறு) இடையிலான சட்டப்பூர்வ ஒப்பந்தமாக அமைவதுடன், ஹற்றன் நேஷனல் வங்கியினால் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் SOLO மின்னணு (Digital) பணப்பரிவர்த்தனைச் சேவைகளின் பயன்பாட்டை ஒழுங்குப்படுத்துவதாகும்.

கீழே காணப்படும் “Get Started” பொத்தானை அழுத்துவதன் மூலம் வாடிக்கையாளர் பின்வருவனவற்றை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்துகின்றனர்.

இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், SOLO மின்னணு பணப்பரிவர்த்தனைச் சேவைகள் தொடர்பான விபரங்களுடன் சேர்த்து, இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வாடிக்கையாளருக்கு முறையாக விளக்கப்பட்டுள்ளதையும், வாடிக்கையாளர் தாம் இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் அவ்விபரங்களையும் முழுமையாக வாசித்துப் புரிந்துக்கொண்டுள்ளதையும், மேலும் அவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கட்டுப்படுத்துவதற்கும் இணங்குவதற்கும் தனது முழுமையான சம்மதத்தையும் ஒப்புதலையும் வழங்குகின்றாரென்பதையும் வாடிக்கையாளர் உறுதிப்படுத்துகின்றார்.

01. வரைமுறைகள்

இவ்வாவணத்தில் SOLO மின்னணு பணப்பரிவர்த்தனைத் தளத்தின் பயன்பாட்டுடனும் தொடர்புடைய வகையில், வேறுவிதமாகக் குறிப்பிடப்படாத வரையில்,

அ.“வாடிக்கையாளர்” என்பது இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, SOLO செயலியை(App) பதிவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம், SOLO மின்னணு பணப்பரிவர்த்தனைத் தளத்தில் வழங்கப்படும் வசதிகள் மற்றும் செயல்பாடுகளைப் பயன்படுத்தத் தெரிவு செய்யும் நபரைக் குறிக்கும்.

ஆ.“தினசரி வரம்பு”(Daily Limit) என்பது, SOLO கணக்கின் ஊடாக ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளின் அதிகப்பட்ச பணப் பெறுமதியைக் குறிக்கும். இங்கு ஒரு நாள் என்பது இலங்கை நிலையான நேரத்தின்படி (Sri Lanka standard time), இரவு 12.00 மணி முதல் ஆரம்பமாகும் இருபத்துநான்கு (24) மணிநேர காலப்பகுதியைக் குறிக்கும். குறித்த தொகை ஹற்றன் நேஷனல் வங்கியினால் அவ்வப்போது அறிவிக்கப்படக்கூடியதுடன், ஹற்றன் நேஷனல் வங்கியின் தனிப்பட்ட தீர்மானத்தின் பேரில் மாற்றத்திற்கும் உட்பட்டதாக இருக்கும்.

இ.“SOLO கணக்கு”(SOLO Account) என்பது, மின்னணு பணப்பரிவர்த்தனைச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கும், வாடிக்கையாளரால் SOLO செயலியில் உருவாக்கப்படும் பயனர் கணக்கைக் குறிக்கும். மேலும், இது எந்தவொரு வங்கிக் கணக்காகவோ அல்லது வேறு எந்தக் கட்டணக் கருவியாகவோ (Payment Instrument) கருதப்படமாட்டாது.

ஈ. "SOLO விண்ணப்பம்" அல்லது "SOLO" அல்லது "SOLO செயலி" என்பது, SOLO டிஜிட்டல் தளத்துடன் தொடர்புடையதாக இருந்து, அங்கீகரிக்கப்பட்ட செயலி சேமிப்பகம் (App store) ஒன்றின் ஊடாக பதிவிறக்கம் செய்வதற்காக வழங்கப்படும் மொபைல் செயலியைக் குறிக்கும்.

உ.“SOLO உதவி” (SOLO Support) என்பது, டிஜிட்டல் கட்டணச் சேவைகளின் நோக்கங்களுக்காக ஹற்றன் நேஷனல் வங்கியினால் வழங்கப்படும் ஆதரவு சேவையைக் குறிக்கும். இச்சேவை SOLO செயலியின் மூலம் வழங்கப்படுவதுடன், அதனுடன் தொடர்புடைய விபரங்கள் SOLO இணையத்தளத்திலும் SOLO செயலியிலும் கிடைக்கப்பெறும்.

.“SOLO டிஜிட்டல் கட்டணத்தளம் (SOLO Digital Payment Platform) என்பது, வாடிக்கையாளர்களுக்கு SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளை வழங்குவதற்காக ஹற்றன் நேஷனல் வங்கி மற்றும் அதனுடன் இணைந்த பங்காளர்களால் உரிமைக் கொண்டும் நிர்வகித்தும் பராமரித்தும் வரப்படும் தொழில்நுட்பத் தளத்தைக் குறிக்கும்.

.“SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகள் (SOLO Digital Payment Services) என்பது, SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பின்வரும் சேவைகளை குறிக்கும்.

• கட்டணங்களை மேற்கொள்வதற்காக வணிகர்களை அடையாளம் காணும் நோக்கில் வணிகர்களுக்கு வழங்கப்படும் QR குறியீடு (abbreviation for Quick Response Code) எனப்படும் இருப்பரிமாண பட்டைக் குறியீடு (Matrix bar code).
• SOLO செயலியில் பதிவு செய்து, கட்டணங்களை மேற்கொள்வதற்காக ஏற்றுக்கொள்ளத்தக்க ஏதேனும் ஒரு கட்டணக் கருவியை (Payment Instument) அதனுடன் இணைத்தல் அல்லது சேர்த்தல்.
• QR குறியீடுகளை ஸ்கோன் செய்வதன் மூலம் வணிகர்களுக்கான கட்டணங்களை மேற்கொள்ளுதல்.
• விளம்பரச் சலுகைகள், ஊக்குவிப்புகள் (Promotions) மற்றும் அறிமுகக் காட்சிகளை (Introductory Demos) பார்வையிடுதல்.
• ஹற்றன் நேஷனல் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள பயன்பாட்டு சேவை வழங்குனர்களுக்கு (Utility service providers) வாடிக்கையாளர்களால் கட்டணங்களைச் செலுத்துதல்.
• மூன்றாம் தரப்பு இணையத்தளம் ஒன்றின் ஊடாக App Checkout வசதியைப் பயன்படுத்தி கட்டணங்களை மேற்கொள்ளுதல்.
• மூன்றாம் தரப்பு இணையத்தளம் ஒன்றின் ஊடாக Web Checkout வசதியைப் பயன்படுத்தி கட்டணங்களை மேற்கொள்ளுதல்.
• ஹற்றன் நேஷனல் வங்கியால் அவ்வப்போது அறிவிக்கப்படக்கூடிய ஏனைய பரிவர்த்தனைகள் அல்லது சேவைகள்.

ஏ.“SOLO இணையத்தளம் ”(SOLO Website) என்பது, www.getsolo.lk என்ற இணையத்தளத்தைக் குறிக்கும்.

ஐ. “வணிகர் வரம்பு ”(Merchant Limit) என்பது, ஒரு வாடிக்கையாளர் தனது SOLO கணக்கின் ஊடாக ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளின் அதிகப்பட்ச பணப் பெறுமதியைக் குறிக்கும். இங்கு ஒரு நாள் என்பது இலங்கை நிலையான நேரத்தின்படி (Sri Lanka standard time), இரவு 12.00 மணி முதல் ஆரம்பமாகும் இருபத்துநான்கு (24) மணிநேர காலப்பகுதியைக் குறிக்கும். குறித்த தொகை ஹற்றன் நேஷனல் வங்கியினால் அவ்வப்போது அறிவிக்கப்படக்கூடியதுடன், ஹற்றன் நேஷனல் வங்கியின் முழுமையான தனிப்பட்ட தீர்மானத்தின் பேரில் மாற்றத்திற்கும் உட்பட்டதாக இருக்கும்.

ஒ.“வணிகர்கள் ”(Merchants) என்பது, தங்களது வணிக நோக்கங்களுக்காக SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தில் கிடைக்கப்பெறும் வசதிகள் மற்றும் செயற்பாடுகளைப் பயன்படுத்தத் தேர்வு செய்து, ஹற்றன் நேஷனல் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் அல்லது சேவைகளை வழங்கும் வழங்குநர்களைக் குறிக்கும்.

ஓ. “மொபைல் சாதனம் ”(Mobile Device) என்பது, மொபைல் தொலைப்பேசி, டேப்லெட்(Tablet), ஃபாப்லெட் (Phablet) அல்லது மொபைல் தொலைத்தொடர்பு வலையமைப்புகளுடன் இணைவதற்கும் இணைய இணைப்பைப் பெறுவதற்கும் திறனுடைய வேறு ஏதேனும் மொபைல் சாதனத்தைக் குறிக்கும். அத்தகைய சாதனம், இது ஹற்றன் நேஷனல் வங்கியினால் அவ்வப்போது அறிவிக்கப்படக்கூடிய தொழில்நுட்ப மற்றும் விபரக்குறிப்பு தேவைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.

ஔ. “ மொபைல் இலக்கம் ”(Mobile Number) என்பது, ஹற்றன் நேஷனல் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் அல்லது SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளுக்காக பதிவு செய்யும் போது ஹற்றன் நேஷனல் வங்கியுடன் தொடர்புக் கொள்வதற்காக தொடர்பு இலக்கமாக வாடிக்கையாளரால் வழங்கப்பட்டுள்ள வாடிக்கையாளரின் தொலைப்பேசி இலக்கத்தைக் குறிக்கும்.

க்.“ஹற்றன் நேஷனல் வங்கி ”(Hatton National Bank) என்பது, 2007 ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பனி சட்டத்தின் (Companies Act) கீழ் நிறுவனப் பதிவு இல.PQ/82 இலக்கத்துடன் இணைக்கப்பட்ட ஒரு பொதுவான வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமான ஹற்றன் நேஷனல் வங்கி பிஎல்சி யையும், 1988 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிகள் சட்டத்தின்(Banking Act) கீழ் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியாக(Licensed Commercial Bank) செயற்படும் அதே நிறுவனத்தையும் குறிக்கும். மேலும், அதன் சட்டப்பூர்வ வாரிசுகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட உரிமைமாற்றப் பெறுநர்களும் இதில் உள்ளடங்குவர்.

ங்.“கட்டணத் தொகை”(Payment Amount) என்பது, ஒரு கட்டணப் பரிவர்த்தனையின் இலங்கை ரூபாய் பெறுமதியையும், அதனுடன் தொடர்புடைய சேவைக் கட்டணங்கள், பிற அறவீடுகள் மற்றும் பொருந்துமிடத்து விதிக்கப்படும் வரிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்த தொகையைக் குறிக்கும்.

ச்.“கட்டணக் கருவிகள்”(Payment Instruments) என்பது, ஹற்றன் நேஷனல் வங்கிக் கணக்கு, ஹற்றன் நேஷனல் வங்கி பற்று அட்டை(Debit card), ஹற்றன் நேஷனல் வங்கி கடன் அட்டை(Credit card) மற்றும் ஹற்றன் நேஷனல் வங்கியினால் ஏற்றுக் கொள்ளப்படும் ஏனைய நடப்புக் கணக்குகள்(Current Accounts), சேமிப்பு கணக்குகள்(Savings Accounts), கடன் அட்டைகள்(Credit cards) மற்றும் வங்கி பற்று அட்டைகள்(Debit cards) ஆகியவற்றைக் குறிக்கும். இக்கட்டணக் கருவிகள், கட்டணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக, வாடிக்கையாளரால் தனது SOLO கணக்கில் பதிவு செய்வதற்கு தெரிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஞ். “கட்டணப் பரிவர்த்தனை”(Payment Transaction) என்பது, SOLO இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் பரிவர்த்தனைகள் தொடர்பாக, வாடிக்கையாளரின் தொடர்புடைய கட்டணக் கருவியிலிருந்து கட்டணத் தொகை (Payment Amount), பற்று வைக்கப்படுதல்(Debited), அறவிடப்படுதல்(Charged) அல்லது அதனுடன் தொடர்புடைய பிற பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதற்கு வழிவகுக்கும் கட்டணச் செயலாக்கத்தைக் (Processing of the payment) குறிக்கும். குறித்த பரிவர்த்தனைகள் தொடர்பான மேலதிக விபரங்களும் (பொருந்துமிடத்து வரம்புகள் உட்பட) SOLO இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

i. SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளை ஏற்றுக்கொள்ளும் வணிகர்களுக்கு அல்லது அவர்களிடம் வாடிக்கையாளரால் மேற்கொள்ளப்படும் கட்டணங்கள்.
ii. இணையவழிக் கட்டணங்கள் (Online Payments)
iii. ஹற்றன் நேஷனல் வங்கியால் அவ்வப்போது அறிவிக்கப்படக்கூடிய ஏனைய பரிவர்த்தனைகள்

ட்.“பதிவுத் தகவல்கள்” (Registration Informations) என்பது, SOLO கணக்கைப் பதிவு செய்வதற்குப் பொருந்தும் தேவைகளை, இவ்விதிமுறைகளின் 5ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பூர்த்தி செய்வதற்காக, வாடிக்கையாளரால் ஹற்றன் நேஷனல் வங்கிக்கு வழங்கப்படும் தகவல்கள் மற்றும் அவற்றை உறுதிப்படுத்தும் ஆதார ஆவணங்களை குறிக்கும்.

ண். "விதிமுறைகளும் நிபந்தனைகளும்" (Terms and Conditions) என்பது, ஹற்றன் நேஷனல் வங்கியால் அவ்வப்போது கூடுதலாகச் சேர்க்கப்படக்கூடிய, மாற்றீடு செய்யப்படக்கூடிய, திருத்தப்படக்கூடிய அல்லது பதிலீடு செய்யப்படக்கூடிய இவ்விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் குறிக்கும்.

த். “பரிவர்த்தனை வரம்பு” (Transaction Limit) என்பது, SOLO கணக்கின் மூலம் ஒவ்வொரு கட்டணப் பரிவர்த்தனைகளும் செலவிடக்கூடிய அதிகப்பட்ச பணப் பெறுமதியைக் குறிக்கும். குறித்த தொகை ஹற்றன் நேஷனல் வங்கியினால் அவ்வப்போது அறிவிக்கப்படக்கூடியதுடன், ஹற்றன் நேஷனல் வங்கியின் முழுமையான தனிப்பட்ட விருப்பாக்கத்தின் பேரில் மாற்றத்திற்கு உட்பட்டதாகும்.

ந்.“பயனர் அங்கீகாரத் தகவல்கள்” (User Credentials) என்பது, வாடிக்கையாளர் தனது SOLO கணக்கை அணுகுவதற்கும் மற்றும் SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளைப் பயன்படுத்துவதற்குமான நோக்கத்திற்காகப் பதிவு செய்துள்ள பயனர் அடையாளங்கள்(User IDs), தனிப்பட்ட அடையாள இலக்கங்கள்(PINs), கடவுச் சொற்கள்(Passwords) மற்றும் உயிரியல் அடையாளத் தரவுகள்(Biometric data) ஆகியவற்றைக் குறிக்கும்.

ப்.'Justpay" என்பது, பாதுகாப்பான நிகழ்நேர (Real- Time) சில்லறைக் கட்டணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கத்திற்காக, இலங்கை மத்திய வங்கியினாலும் (Central Bank) மற்றும் லங்காபே பொது மின்னணு நிதிப் பரிமாற்ற அமைப்பின் ( Lanka pay Common Electronic Fund Transfer- CEFTS) அனைத்து உறுப்பினர்களினாலும் ஆதரிக்கப்படும் கட்டண முறைமையைக் குறிக்கும்.

02. SOLO டிஜிட்டல் கட்டணத்தளம்

இவ்விதிமுறைகளும் நிபந்தனைகளும், அவற்றுடன் இணைந்து SOLO இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள், தொழில்நுட்ப விபரக்குறிப்புகள் மற்றும் வரம்புகள் (இவ்விதிமுறைகளிலும் நிபந்தனைகளிலும் மேற்கோள் மூலம் இணைக்கப்பட்டுள்ளவை) ஆகியவற்றுடன் சேர்த்து, (இவ்விதிமுறைகளும் நிபந்தனைகளும், ஹற்றன் நேஷனல் வங்கி வாடிக்கையாளருக்கு SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளை வழங்குவதையும், வாடிக்கையாளர் அவ்வாறான SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளைப் பயன்படுத்துவதையும் ஒழுங்குப்படுத்துகின்றன. SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகள் வழங்கப்படுவது தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக SOLO இணையத்தளத்தை அணுகுவதற்கும், மேலதிக தகவல்கள் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் SOLO ஆதரவு (SOLO Support) சேவையைத் தொடர்புக் கொள்வதற்கும் வாடிக்கையாளர் இணங்குகிறார். குறிப்பாக, இவ்விதிமுறைகளிலும் நிபந்தனைகளிலும் மேற்கொள்ளப்படும் ஏதேனும் திருத்தங்கள் அல்லது மேலதிகச் சேர்க்கைகள் குறித்த இணையத்தளத்தில் வெளியிடப்படுவதுடன், மின்னணுச் செய்தி ஒன்றின் மூலம் வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படும்.

03. SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளின் ஆரம்பம்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, SOLO செயலியை (SOLO App) பதிவிறக்கம் செய்து, இவ்விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர், SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு உரிமையுடையவராவார். SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளைப் பயன்படுத்துவதற்காக, வாடிக்கையாளர் தனது SOLO கணக்கில் ஒரு கட்டணக் கருவியை (Payment Instument) பதிவு செய்யும் போது, அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பக்கங்களில் கோரப்படும் அனைத்து தகவல்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள கட்டணக்கருவிகள், அவற்றை வழங்கிய நிதி நிறுவனத்தினால் செல்லுப்படியாகவும் நன்மதிப்புடைய நிலையிலும் (in Good Standing) இருப்பதை உறுதிப்படுத்தும் தகவல்களைப் பெறுவதற்கு ஹற்றன் நேஷனல் வங்கிக்கு வாடிக்கையாளர் இதன்மூலம் அதிகாரமளிக்கிறார்.

04. வாடிக்கையாளர்களின் வகைகள்

ஹற்றன் நேஷனல் வங்கி ஒரு வாடிக்கையாளருக்கு வழங்கும் SOLO மின்னணு கட்டணச் சேவைகளின் தன்மையும் அவற்றின் வரம்பும், அந்த வாடிக்கையாளரின் வகையைப் பொறுத்து மாறுப்படும். வாடிக்கையாளரின் வகைகளும், அத்தகைய ஒவ்வொரு வகை வாடிக்கையாளருக்கும் கிடைக்கக்கூடிய SOLO மின்னணு கட்டணச் சேவைகளும், SOLO செயலி மற்றும் SOLO இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு வாடிக்கையாளருக்கு எந்த SOLO மின்னணு கட்டணச் சேவைகள் கிடைக்கப்பெறும் என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள, வாடிக்கையாளர் SOLO ஆதரவு சேவையை தொடர்புக் கொள்ளவோ அல்லது SOLO இணையத்தளத்தை அணுகவோ அறிவுறுத்தப்படுகிறார்.

05. SOLO மின்னணு கட்டணச் சேவைகளில் பதிவு செய்வதற்கான தேவைகள்

அ.SOLO மின்னணு கட்டணச் சேவைகளில் பதிவு செய்வதற்காக, ஒரு வாடிக்கையாளர் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

i. இலங்கை தேசிய அடையாளஅட்டை(National Identity Card) மற்றும் செல்லுப்படியாகும் ஓட்டுநர் உரிமம் (Driving License) வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
ii. 16 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
iii. SOLO இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்கு இணங்கும் மென் பொருளைக் கொண்ட மொபைல் சாதனத்தை கொண்டிருக்க வேண்டும்.
iv. வாடிக்கையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் இலக்கமொன்றை வழங்க வேண்டும் (அல்லது குறித்த மொபைல் இலக்கம் வாடிக்கையாளரைத் தவிர வேறொரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அத்தகைய மொபைல் இலக்கத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.) மற்றும்
v. ஹற்றன் நேஷனல் வங்கியின் பணமோசடி தடுப்பு(Anti- Money Laundering) மற்றும் “உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்” (Know Your Customer) தொடர்பான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்தல்.

ஆ.மேற்கூறிய பதிவுத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்காக, வாடிக்கையாளர் போதுமான பதிவுத் தகவல்களை ஹற்றன் நேஷனல் வங்கிக்கு வழங்க வேண்டும். அத்தகைய பதிவுத் தகவல்கள், ஹற்றன் நேஷனல் வங்கி அவ்வப்போது நிர்ணயிக்கும் நடைமுறைக்கு இணங்க வழங்கப்பட வேண்டும். அதில் SOLO செயலியின் ஊடாக மின்னணு முறையில் பதிவுத் தகவல்களைச் சமர்ப்பிப்பதும் அடங்கும். அவ்வாறு தேவையென்று கருதப்படும் சந்தர்ப்பங்களில், பதிவுத் தகவல்களை மூன்றாம் தரப்பினரின் மூலம் சரிபார்க்கும் உரிமையை ஹற்றன் நேஷனல் வங்கி தக்கவைத்துக் கொள்கிறது.

இ.மேற்கூறிய தேவைகளை பூர்த்தி செய்திருந்த போதிலும், எந்தவொரு நபரையும் வாடிக்கையாளராகப் பதிவு செய்வதை அங்கீகரிப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான முழமையான மற்றும் பிரத்தியேகமான விருப்புரிமை ஹற்றன் நேஷனல் வங்கிக்கே உரியது.

ஈ.ஹற்றன் நேஷனல் வங்கியின் தொடர்ச்சியான பணமோசடி தடுப்பு(Anti- Money Laundering) மற்றும் “உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்” (Know Your Customer) தொடர்பான அனைத்துத் தேவைகளை பூர்த்தி செய்வதன் நோக்கத்திற்காக, வாடிக்கையாளரின் SOLO பதிவு நிறைவடைந்த பின்னரும், அவ்வப்போது மேலதிக ஆவணங்களையும் அவற்றை உறுதிப்படுத்தும் தகவல்களையும் கோருவதற்கான உரிமையை ஹற்றன் நேஷனல் வங்கி தக்கவைத்து கொள்கிறது. ஹற்றன் நேஷனல் வங்கி அவ்வாறு கோரிய ஆவணங்களுக்கு அவற்றை உறுதிப்படுத்தும் தகவல்களும் திருப்திகரமான முறையில் வழங்கப்படத் தவறினால், ஹற்றன் நேஷனல் வங்கி தனது முழமையான மற்றும் பிரத்தியேகமான விருப்புரிமையின் பேரில், வாடிக்கையாளரின் SOLO கணக்கை தடை செய்யவோ அல்லது மூடவோ அதிகாரம் பெற்றுள்ளது.

உ.வாடிக்கையாளர் வழங்கும் பதிவுத் தகவல்கள் (Registration Information) துல்லியமானவையாகவும், உண்மையானவையாகவும், அந்த வாடிக்கையாளருடன் மட்டுமே தொடர்புடையதாகவும், வேறு எந்த நபருடனும் தொடர்பற்றவையாகவும் இருப்பதை உறுதி செய்வது வாடிக்கையாளரின் பொறுப்பாகும். அவ்வாறான பதிவுத் தகவல்களை எப்போதும் புதுப்பிக்கப்பட்ட நிலையில் பராமரிப்பதும் அல்லது அவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதனை ஹற்றன் நேஷனல் வங்கிக்கு உடனடியாக அறிவிப்பதும் வாடிக்கையாளரின் பொறுப்பாகும். ஒரு வாடிக்கையாளரின் இலங்கை பிரஜாவுரிமை நிலையில் ஏற்படும் மாற்றம், அத்தகைய வாடிக்கையாளரை SOLO மின்னணு கட்டணச் சேவைகளை பயன்படுத்துவதற்கு தகுதியற்றவராக்கும்.

06. SOLO மின்னணு கட்டணச் சேவைகள்

அ.SOLO மின்னணு கட்டணச் சேவைகள் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆ.SOLO மின்னணு கட்டணத்தளம் சட்டப்பூர்வமானதும் நியாயமானதுமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளிலும் SOLO இணையத்தளத்திலும் குறிப்பிட்டுள்ளவாறு அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

இ.வாடிக்கையாளரின் கட்டணக் கருவிகள் (Payment Instuments) அங்கீகரிக்கப்பட்டவுடன் அதனுடன் தொடர்புடைய கட்டணப் பரிவர்த்தனைகள் (Payment Transaction) நிறைவுப் பெற்றதாகவும், அதன் கட்டுப்பாடு முறையாகத் தீர்க்கப்பட்டதாகவும் கருதப்படும். கட்டணக் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்படும் கட்டணப் பரிவர்த்தனைகள், வாடிக்கையாளருக்கும் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கும் மற்றும் (பற்று அட்டை/ கடன் அட்டை Justpay அல்லது தொடர்பான சந்தர்ப்பங்களில்) இடையில் நடைமுறையிலுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.

ஈ.வாடிக்கையாளர் கட்டணக் கருவி (Payment Instument) ஒன்றைப் பயன்படுத்துவதன் விளைவாக, அக்கட்டணக் கருவிக்குப் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் விதிக்கப்படக்கூடிய அனைத்து சேவைக் கட்டணங்களையும் செலுத்துவதற்கான முழுப் பொறுப்பும் வாடிக்கையாளரையே சாரும்.

உ.SOLO மின்னணு கட்டணச் சேவைகளை இடையூறின்றி தொடர்ந்து பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் பொருட்டு, கட்டணக் கருவிகளை உரிய காலத்திற்குள் புதுப்பித்தல் மற்றும் அவற்றின் செல்லுப்படியாகும் காலத்தைப் புதுப்பித்தல் (Renewal) என்பவற்றிற்கான முழுப் பொறுப்பும் வாடிக்கையாளரையே சாரும்.

ஊ.SOLO மின்னணு கட்டணத் தளத்தின் ஊடாக செயலாக்கப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் (Transactions) வாடிக்கையாளருக்குப் பணத்தை மீளப்பெறுவதற்கு (Refund) தகுதியற்றவையாகும். மேலும், SOLO மின்னணு கட்டணத் தளத்தின் ஊடாக அத்தகைய பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர் மீள மாற்றம் (Reverse) செய்ய இயலாது. எனினும், தொடர்புடைய கட்டணக் கருவிகளுக்குப் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், பணத்தை மீளபெறுதல் (Refund), பரிவர்த்தனையை மீள மாற்றுதல்(Reversal) அல்லது கட்டணத்தை மீளக் கோருதல் (Charge-back) தொடர்பான மேலதிக உரிமைகள் வாடிக்கையாளருக்கு இருக்கக்கூடும்.

எ.வாடிக்கையாளரின் SOLO கணக்கு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கட்டணக் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் ஹற்றன் நேஷனல் வங்கிக்கு உரிமையுண்டு. SOLO கணக்கு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கட்டணக் கருவிகள் ஊடாக சந்தேகத்திற்கிடமாக அல்லது திட்டமிடப்படாத பரிவர்த்தனைகள் இடம்பெறுவதாக ஹற்றன் நேஷனல் வங்கி கருதும் பட்சத்தில், வாடிக்கையாளருக்கு முன்னறிவிப்பு வழங்காமல், அத்தகைய பரிவர்த்தனைகளை மீள மாற்றம் செய்யவோ அல்லது இடைநிறுத்தவோ, மேலும், SOLO கணக்கின் பயன்பாட்டை இடைநிறுத்தவோ ஹற்றன் நேஷனல் வங்கிக்கு உரிமை கொண்டுள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் SOLO கணக்கிற்கான அணுகலைக் கட்டுப்படுத்தியதன் காரணமாக ஹற்றன் நேஷனல் வங்கி எவ்விதப் பொறுப்பையும் ஏற்காது.

ஏ.2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்தின்(Financial Transactions Reporting Act) கீழ், நிறுவப்பட்டுள்ள நிதி நுண்ணறிவுப் பிரிவிற்கு (Financial Intelligence Unit- FIU) மற்றும் தேவைக்கேற்ப ஏனைய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும், ஒழுங்குப்படுத்தும் அதிகார அமைப்புகளுக்கும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தொடர்பாக அறிவிப்பதற்கான உரிமை ஹற்றன் நேஷனல் வங்கிக்கு உண்டு.

ஐ.நிதி நுண்ணறிவுப் பிரிவு (Financial Intelligence Unit- FIU) அவ்வப்போது நிர்ணயிக்கும் விதிமுறைகளுக்கு இணங்க, CASA பரிவர்த்தனைகள், கடன் அட்டை பரிவர்த்தனைகள் பற்று அட்டை பரிவர்த்தனைகள் மற்றும் ஒழுங்குவிதிகளின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மீறும் அனைத்து பரிவர்த்தனைகளையும் FIU க்கு அறிக்கையிடுவதற்கு ஹற்றன் நேஷனல் வங்கி கடமைப்பட்டுள்ளது.

ஒ.ஏதேனும் ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டாமென FIU உரிய அதிகார அமைப்பு அல்லது ஒழுங்குமுறை அதிகார அமைப்பு ஹற்றன் நேஷனல் வங்கிக்கு அறிவுறுத்தும் பட்சத்தில், அவ்வமைப்புகள் தேவையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கும் பொருட்டு, குறித்த பரிவர்த்தனையை ஹற்றன் நேஷனல் வங்கி இடைநிறுத்தும்.

ஓ.மேற்கூறிய நடவடிக்கைகள் தொடர்பாக ஹற்றன் நேஷனல் வங்கி மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் குறித்த வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படுவதற்கான உரிமை இருக்காது. மேலும், ஹற்றன் நேஷனல் வங்கி அவ்வாறு மேற்கொள்ளும் போது எந்தவொரு நடவடிக்கையினாலும் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பாக, ஹற்றன் நேஷனல் வங்கி வாடிக்கையாளரிடம் எந்தவிதப் பொறுப்பும் அல்லது பொறுப்புக்கூறலும் ஏற்காது.

ஔ.ஹற்றன் நேஷனல் வங்கி அவ்வப்போது நிர்ணயிக்கக்கூடிய வணிகர் வரம்பு (Merchant Limit), பரிவர்த்தனை வரம்பு (Transaction Limit) மற்றும் அல்லது தினசரி வரம்பு (Daily Limit) ஆகியவற்றிற்கு வாடிக்கையாளர் உட்பட்டவராக இருப்பதுடன், அவற்றுக்கு இணங்கக் கடைப்பிடிக்கவும் வேண்டும். இருப்பினும், பொருந்தக்கூடிய வணிகர் வரம்பு, பரிவர்த்தனை வரம்பு மற்றும் தினசரி வரம்பு ஆகியவற்றின் எல்லைக்குள் இருக்கும் வகையில், தனது சொந்த தினசரி வரம்பையும் பரிவர்த்தனை வரம்பையும் நிர்ணயித்துக் கொள்ளும் விருப்பத் தேர்வு வாடிக்கையாளருக்கு உண்டு.

க்.கட்டணப் பரிவர்த்தனை (Payment Transaction) ஒன்றை ஆரம்பிக்கும் நேரத்தில், தனது மொபைல் சாதனம் (Mobile Device) தனது உடைமையிலும் கட்டுப்பாட்டிலும் இருப்பதை வாடிக்கையாளர் உறுதிப்படுத்துகிறார். இதன் மூலம், அச்சாதனத்தில் அனுப்பப்படும் சரிப்பார்ப்பு செய்தியின்(Verfication Message) ஊடாக, குறித்த கட்டணப் பரிவர்த்தனையை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வாடிக்கையாளரால் முடியும்.

6.1 கட்டணக் கருவிகள் (Payment Instruments)

அ.ஹற்றன் நேஷனல் வங்கி SOLO இணையத்தளத்தில் அவ்வப்போது குறிப்பிடப்படும் விபரக்குறிப்புகளுக்கு இணங்க, பிற வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்ட கட்டணக் கருவிகள் (Payment Instruments) தனது SOLO கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம். ஒரு கட்டணக்கருவி, வாடிக்கையாளரின் SOLO கணக்குடன் இணைக்கப்பட்டதும், வாடிக்கையாளருக்கு SOLO மின்னணுக் கட்டணச் சேவைகளை வழங்குவதற்குத் தேவையான தொடர்புடைய கணக்கு இலக்கங்கள் மற்றும் அடையாள இலக்கங்களை தேவையான அளவிற்கு ஹற்றன் நேஷனல் வங்கி சேமித்து வைத்திருக்கும். கட்டணக் கருவிகள் தொடர்பாக, வாடிக்கையாளருக்கும் அத்தகைய பிற வங்கி மற்றும் நிதி நிறுவனத்திற்கும் இடையில் நிலவும் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் ஹற்றன் நேஷனல் வங்கி தரப்பினராக இல்லையென்பதையும், மேலும் கடன் வசதியை வழங்குதல் அல்லது கடன் வசதியை பெறுவதற்கான தகுதியை நிர்ணயித்தல் ஆகியவற்றில் ஹற்றன் நேஷனல் வங்கி எவ்வித்திலும் ஈடுப்படவில்லை என்பதையும் வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார். மேலும், அத்தகைய கட்டணக் கருவிகள் செல்லுப்படியாகவும் திருப்திகரமான நிலையிலும் உள்ளனவென்றோ, அல்லது தொடர்புடைய வங்கி மற்றும் நிதி நிறுவனம் SOLO மின்னணுக் கட்டணத் தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு கட்டணப் பரிவர்த்தனையையும் (Payment Transaction) அங்கீகரிக்கும் அல்லது அனுமதிக்கும் என்பதையோ ஹற்றன் நேஷனல் வங்கி எவ்வித உறுதிப்படுத்தலையும், பிரதிநிதித்துவத்தையும் அல்லது உத்தரவாதத்தையும் வழங்குவதில்லை.

ஆ.குறிப்பிட்ட கட்டணக் கருவிகள் (Payment Instruments) ஒன்றின் மூலம் SOLO மின்னணுக் கட்டணச் சேவைகளை பயன்படுத்துவது, இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும், அதே போன்று குறித்த கட்டணக் கருவி திறக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்குப் பொருந்தும் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை(Privacy Policy) ஆகியவற்றிற்கு உட்பட்டதாகும். இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் தொடர்புடைய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், SOLO தொடர்பான ஹற்றன் நேஷனல் வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கிடையிலான உறவைப் பொறுத்தவரை இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளே அமுல்படுத்தப்படும் அதேவேளை, வாடிக்கையாளருக்கும் குறித்த வங்கி மற்றும் நிதி நிறுவனத்திற்கும் இடையிலான உறவைப் பொறுத்தவரை, அந்நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளே நடைமுறையில் அமுல்படுத்தப்படும்.

இ.வாடிக்கையாளர் தனது SOLO கணக்குடன் இணைக்கப்பட வேண்டிய கட்டணக் கருவிகளை (Payment Instruments) தெரிவு செய்து நியமிப்பதன் மூலம் SOLO மின்னணுக் கட்டணச் சேவைகளைப் பயன்படுத்தும் நோக்கத்திற்காக, அக்கட்டணக் கருவிகளில் ஹற்றன் நேஷனல் கடன் வரவு (Credit) மற்றும் பற்று வரவு (Debit) பதிவுகளை மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர் தனது வெளிப்படையான சம்மதத்தை வழங்குகிறார். மேலும் கட்டணக் கருவிகள் தொடர்பான அனைத்து செயற்பாட்டு அறிவுறுத்தல்களும் வாடிக்கையாளர் SOLO மின்னணுக் கட்டணச் சேவைகளைப் பயன்படுத்தும் முறையுடன் ஒத்திசைவாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக, வாடிக்கையாளர் ஹற்றன் நேஷனல் வங்கிக்கு உறுதியளிக்கிறார் (Represents), உத்தரவாதமளிக்கிறார் (Warrants) மற்றும் பொறுப்பேற்று உறுதியேற்கிறார் (Undertakes).

ஈ.வாடிக்கையாளர் தனது SOLO கணக்குடன் கட்டணக் கருவிகளை (Payment Instruments) இணைக்கத் தெரிவு செய்வதன் மூலம், வாடிக்கையாளருக்கு வழங்கப்படவுள்ள பொருட்கள் அல்லது சேவைகளுக்கான கட்டணத்தை அறவிடும் நோக்கத்திற்காக, அத்தகைய கட்டணக் கருவிகளின் விபரங்களையும் அவற்றுடன் தொடர்புடைய தகவல்களையும் மூன்றாம் தரப்பினருக்கு ஹற்றன் நேஷனல் வங்கி வெளிப்படுத்துவதற்கும் வழங்குவதற்கும் தனது சம்மதத்தை வழங்குவதுடன், அதனை ஏற்றுக்கொள்கிறார். அவ்வாறு குறித்த விபரங்களும் தகவல்களும் மூன்றாம் தரப்பினருடனான பரிவர்த்தனையில் ஹற்றன் நேஷனல் வங்கிக்கு எந்தவொரு மேலதிக ஈடுபாடும் அல்லது பொறுப்பும் இருக்காது. அத்தகைய மூன்றாம் தரப்பினருடனான பரிவர்த்தனையிலிருந்து எழும் அல்லது அதனுடன் தொடர்புடைய எந்தவொரு பிரச்சனைக்கும் ஹற்றன் நேஷனல் வங்கி பெறுப்பேற்காது. அத்தகைய பரிவர்த்தனைகள் தொடர்பாக ஏதேனும் முரண்பாடு அல்லது தகராறு எழுந்தால், வாடிக்கையாளர், குறித்த மூன்றாம் தரப்பினரையோ அல்லது தொடர்புடைய கட்டணக் கருவி திறக்கப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ள வங்கி அல்லது நிதி நிறுவனத்தையோ நேரடியாகத் தொடர்புக்கொள்ள வேண்டும்.

உ. SOLO கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டணக் கருவிகள் தொடர்பான தகவல்கள் (உதாரணமாக, காலாவதியாகும் திகதி, புதுப்பிக்கப்பட்ட அட்டை இலக்கம் மற்றும் ஏனைய தொடர்புடைய விபரங்கள்) துல்லியமானதாகவும், முழுமையானதாகவும், புதுப்பிக்கப்பட்டதாகவும் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்வது வாடிக்கையாளரின் பொறுப்பாகும். மேலும், குறித்த கட்டணக் கருவிகளை தனது SOLO கணக்கில் பதிவு செய்வதற்கு தேவையான அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் தனக்கு உள்ளனவென வாடிக்கையாளர் ஹற்றன் நேஷனல் வங்கிக்கு உறுதியளிக்கிறார் மற்றும் உத்தரவாதமளிக்கிறார்.

07. கட்டணங்கள் (Fees)

அ.SOLO மின்னணுக் கட்டணச் சேவைகளைப் பயன்படுத்துவதன் காரணமாக விதிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள் (ஏதேனும் இருப்பின்), சேவையை நிறுத்துதல் (Termination) தொடர்பாக விதிக்கப்படக்கூடிய கட்டணங்கள் உட்பட (இவை அனைத்தும் ஒருங்கிணைந்து கட்டணங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன) ஹற்றன் நேஷனல் வங்கியின் இணையத்தளமான www.hnb.net மற்றும் SOLO இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஹற்றன் நேஷனல் வங்கி Retail Services Tariff இல் குறிப்பிட்டுள்ளவாறு, வாடிக்கையாளரால் ஏற்கப்பட்டு செலுத்தப்பட வேண்டும். இத்தகைய கட்டணங்களை(Charges) அவ்வப்போது திருத்துவதற்கும் மாற்றுவதற்கும் அல்லது மறுநிர்ணயிப்பதற்குமான உரிமையை ஹற்றன் நேஷனல் வங்கி தக்கவைத்துக் கொள்கிறது.

ஆ. SOLO மின்னணுக் கட்டணச் சேவைகளை வாடிக்கையாளர் பயன்படுத்துவதன் விளைவாக செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகள், முத்திரைத் தீர்வை(Stamp Duty) மற்றும் ஏனைய விதிப்பணங்கள் (இவை அனைத்தும் ஒருங்கிணைந்து விதிப்பணங்கள் (Levies) எனக் குறிப்பிடப்படுகின்றன) ஆகியவற்றை வாடிக்கையாளர் ஹற்றன் நேஷனல் வங்கிக்கு செலுத்த வேண்டும் அல்லது ஹற்றன் நேஷனல் வங்கி அவற்றை செலுத்தியிருந்தால், அதற்கான முழுத் தொகையையும் ஹற்றன் நேஷனல் வங்கிக்கு ஈடுசெய்ய வேண்டும்.

இ. SOLO மின்னணுக் கட்டணத் தளத்தை பயன்படுத்துவதன் தொடர்பில், வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய கட்டணங்கள் (Charges) மற்றும் விதிப்பணங்கள் (Levies) இவை அனைத்தும் ஒருங்கிணைந்து கட்டணங்கள் (Charges) எனக் குறிப்பிடப்படுகின்றன. ஹற்றன் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர் வைத்திருக்கும் எந்தவொரு கணக்கிலிருந்தோ அல்லது SOLO உடன் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு கட்டணக் கருவியிலிருந்தோ அல்லது ஹற்றன் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர் வைத்திருக்கும் ஏனைய எந்தவொரு கணக்கிலிருந்தோ பற்று(Debit) பதிவு செய்வதற்கான உரிமை ஹற்றன் நேஷனல் வங்கிக்கு உள்ளது என்பதை வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார்.

ஈ.வாடிக்கையாளர் SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளைப் பயன்படுத்தும் போது, மூன்றாம் தரப்பினரால் விதிக்கப்படக்கூடிய அனைத்து கட்டணங்கள், சேவைக் கட்டணங்கள் மற்றும் பிற செலவுகளையும் வாடிக்கையாளரே முழுமையாக ஏற்றுச் செலுத்துவதற்குப் பொறுப்பாவார். எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவுப்படுத்துவது என்னவெனில், இணைக்கப்பட்டுள்ள கட்டணக் கருவிகள் (Payment Instruments) தொடர்பாக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் (Telecom Operators), வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விதிக்கும் அனைத்து கட்டணங்கள், சேவைக் கட்டணங்கள் மற்றும் பிற செலவுகளுக்கும் வாடிக்கையாளரே முழமையானப் பொறுப்பாளராக இருப்பார்.

08. வாடிக்கையாளரின் உறுதிப்பாடுகள்

அ.தனது மொபைல் சாதனத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து பேணுவது வாடிக்கையாளரின் முழுப் பொறுப்பாகும்.

ஆ.மேற்கண்ட பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, வாடிக்கையாளர் பின்வருனவற்றை மேற்கொள்ள வேண்டும்.

i. மொபைல் சாதனத்தை பாதுகாப்பான முறையில் பாதுகாத்து வைத்திருத்தல்.
ii. பயனர் உள்நுழைவு விபரங்களை (User Credentials) எப்போதும் இரகசியமாகப் பாதுகாத்தல் மற்றும்
iii. SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் PIN குறியீட்டை, பயனர் உள்நுழைவு விபரங்களிலிருந்து தனித்தனியாக பாதுகாப்பான இடத்தில் வைத்திருத்தல்.

இ.ஏதேனும் மொபைல் சாதனம் இழக்கப்பட்டால், வாடிக்கையாளர் உடனடியாக SOLO Support- ஐ தொடர்புக் கொண்டு, ஹற்றன் நேஷனல் வங்கி வழங்கும் வழிமுறைகளின்படி அதனை ஹற்றன் நேஷனல் வங்கிக்கு அறிவிக்க வேண்டும்.

ஈ.ஏதேனும் மொபைல் சாதனம் இழக்கப்பட்டாலோ மற்றும் வாடிக்கையாளரின் SOLO கணக்கின் இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அதனை உடனடியாக ஹற்றன் நேஷனல் வங்கியின் கவனத்திற்கு கொண்டுவருவது வாடிக்கையாளரின் முழமையான மற்றும் தனிப்பட்ட பொறுப்பாகும். குறிப்பாக, வாடிக்கையாளர் தாமதமின்றி SOLO Support-ஐ தொடர்புக் கொண்டு, அத்தகைய சம்பவத்தை ஹற்றன் நேஷனல் வங்கிக்கு அறிவிக்க வேண்டும். மேலும், அந்தப் பிரச்சனையைச் சரிசெய்யவோ அல்லது அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ஹற்றன் நேஷனல் வங்கி வழங்கும் அனைத்து அறிவுறுத்தல்களையும் வாடிக்கையாளர் பின்பற்ற வேண்டும். இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஏனைய பிரிவுகளின் கீழ் ஹற்றன் நேஷனல் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் நிவாரணங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தனது மொபைல் சாதனம் மற்றும் SOLO கணக்கின் இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேணத் தவறியதன் விளைவாக, அங்கீகாரம் பெறாத எந்தவொரு நபராலும் தனது SOLO கணக்கின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் தானே முழுமையான பொறுப்பாளர் என்பதை வாடிக்கையாளர் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறார்.

உ.SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தில் (SOLO Digital Payments Platforms), குறிப்பிட்ட வாடிக்கையாளரின் SOLO கணக்கிற்குரிய பொருந்தக்கூடிய பயனர் உள்நுழைவு விபரங்கள் (User Credentials) பயன்படுத்தபட்டு ஒரு பரிவர்த்தனை நிறைவு செய்யப்பட்டவுடன், அத்தகைய பரிவர்த்தனை இறுதியானதாகவும், வாடிக்கையாளருக்கு கட்டுப்படுத்தக்கூடியதாகவும் அமையும். அத்தகைய பரிவர்த்தனைகள் தொடர்பாக பரிவர்த்தனைகள் தொடர்பாக முழுப்பொறுப்பும் வாடிக்கையாளரையே சாரும். தனது SOLO கணக்கிற்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயனர் உள்நுழைவு விபரங்களுக்கும் வேறு எந்த நபருக்கும் அணுகல் கிடைக்காதவாறு உறுதிசெய்வது வாடிக்கையாளரின் பொறுப்பாகும்.

ஊ.வாடிக்கையாளர் தனது SOLO கணக்கை அணுகுவதற்கு அனுமதியளித்த எந்தவொரு நபராலும் அல்லது வேறு எந்த முறையிலாக இருந்தாலும் பயனர் உள்நுழைவு விபரங்கள் (User Credentials) பயன்படுத்தப்படும் எந்தவொரு மற்றும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும், அவ்வாறான பயன்பாடு அல்லது தவறான பயன்பாட்டினால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் வாடிக்கையாளரே முழுமையாகப் பொறுப்பாவார்.

எ.SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தில் உள்ளிடப்படும் அனைத்து தகவல்களும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்தி, மேற்கொள்ளப்படுவது வாடிக்கையாளர் நோக்கமாகக் கொண்ட பரிவர்த்தனைகளே என்பதை உறுதி செய்வது வாடிக்கையாளரின் பொறுப்பாகும்.

ஏ.SOLO கணக்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு பரிவர்த்தனையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஹற்றன் நேஷனல் வங்கி மேலதிக உறுதிப்படுத்தலைப் பெற வேண்டிய அவசியமில்லை. மேலும் வாடிக்கையாளரின் பொருந்தக்கூடிய பயனர் உள்நுழைவு விபரங்கள் (User Credentials) மூலம் சரிபார்க்கப்பட்ட அறிவுறுத்தல்களை ஹற்றன் நேஷனல் வங்கி நிறைவேற்றியதன் காரணமாக, ஹற்றன் நேஷனல் வங்கி எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

ஐ.இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஏனைய எந்தவொரு விதிக்கும் பாதிப்பில்லாமல், கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலைகளிலும், பொருந்தக்கூடிய சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிற எந்தவொரு சூழ்நிலைகளிலும், SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தின் மூலம் ஒரு பரிவர்த்தனையை நிறைவு செய்ய வாடிக்கையாளர் தவறியதன் காரணமாக, ஹற்றன் நேஷனல் வங்கி எவ்விதத்திலும் பொறுப்பேற்காது என்பதை வாடிக்கையாளர் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறார். அந்தப் பரிவர்த்தனை, குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ள SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தின் (SOLO Digital Payments Platforms) சேவைகளின் வரம்பிற்குள் அடங்காததாக இருப்பின்,

i. தனது முழுமையான மற்றும் தனிப்பட்ட விருப்புரிமையின் அடிப்படையில், குறித்த பரிவர்த்தனை சந்தேகத்திற்குரியதாகவோ அல்லது சட்டவிரோதமானதாகவோ இருப்பதாக ஹற்றன் நேஷனல் வங்கி கருதும் பட்சத்தில்;
ii. குறித்த பரிவர்த்தனை வணிகர் வரம்பு, தினசரி வரம்பு அல்லது பரிவர்த்தனை வரம்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மீறுகின்ற பட்சத்தில்;
iii. வணிகர் குறித்த பரிவர்த்தனையை ஏற்க அல்லது மதிப்பளிக்க மறுக்கும் பட்சத்தில்;
iv. குறித்த பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு தேவையான போதுமான நிதி தொடர்புடைய கட்டணக்கருவியில் வாடிக்கையாளரிடம் இல்லாத பட்சத்தில்;
v. வாடிக்கையாளர் பயன்படுத்தும் மொபைல் சாதனம் SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்துடன் (SOLO Digital Payments Platforms) இணக்கமற்றதாக இருப்பின் அல்லது ஏதேனும் வகையில் கோளாறுடையதாக இருப்பின் அல்லது SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத பட்சத்தில்;
vi. பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகின்ற அல்லது மேற்கொள்ள முயற்சிக்கப்படுகின்ற வணிகரின் உபகரணங்கள் முறையாக இயங்காத பட்சத்தில்;
vii. கட்டணக் கருவி (Payment Instruments) புதுப்பிக்கப்படாமல்(Renew) போன பட்சத்தில்;
viii. வாடிக்கையாளர் அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் தவறானதாகவோ அல்லது உரிய காலத்திற்குள் வழங்கப்படாததாகவோ இருந்தால்; அல்லது
ix. ஹற்றன் நேஷனல் வங்கியின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக (வெள்ளம் அல்லது தீ விபத்து உள்ளிட்டவற்றிற்கு மட்டும் வரையறுக்கப்படாதவை) எந்த நேரத்திலும் SOLO டிஜிட்டல் கட்டணத் தளம் (SOLO Digital Payments Platforms) பயன்படுத்துவதற்கு கிடைக்கப்பெறாத நிலையில் இருப்பின்;

ஒ.SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தின் (SOLO Digital Payments Platforms) ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டணப் பரிவர்த்தனைகளும் நிகழ்நேரத்தில் செயல்படுத்தப்படுகின்றன என்பதை வாடிக்கையாளர் ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொள்கிறார். எனவே, தனித்தனி கட்டணக் கருவிகளுக்கு பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களைத் தவிர, வாடிக்கையாளர் ஒரு கட்டணப் பரிவர்த்தனையை மேற்கொண்ட பின்னர், அதனை நிறுத்துவதற்கோ அல்லது மீள்மாற்றம் செய்வதற்கோ ஹற்றன் நேஷனல் வங்கி எவ்வித உறுதியும் அல்லது பொறுப்பேற்பும் வழங்காது.

ஓ. SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தின் (SOLO Digital Payments Platforms) ஊடாக, வணிகர்களுடன் வாடிக்கையாளர் மேற்கொள்ளும் எந்தவொரு பரிவர்த்தனை தொடர்பாகவும் ஹற்றன் நேஷனல் வங்கியை வாடிக்கையாளர் பொறுப்புக்குட்படுத்தமாட்டார். மேலும், ஒவ்வொரு பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்படும் தருணத்திலேயே, அதனுடன் தொடர்புடைய அனைத்து அம்சங்களும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது வாடிக்கையாளரின் முழுப்பொறுப்பாகும்.

ஔ.வணிகர் வழங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், பொருத்தம் அல்லது திருப்திகரமான நிலை தொடர்பாக ஹற்றன் நேஷனல் வங்கி எவ்விதப் பொறுப்பையும் ஏற்காது.

க். ஹற்றன் நேஷனல் வங்கி தனது சொந்த தயாரிப்புகளையோ அல்லது மூன்றாம் தரப்பினரின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தின் (SOLO Digital Payments Platforms) ஊடாக வாடிக்கையாளரிடம் விளம்பரப்படுத்தவும், மேம்படுத்தவும் உரிமைப் பெற்றிருக்கும்.

ச். SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தின் (SOLO Digital Payments Platforms) ஊடாக, ஹற்றன் நேஷனல் வங்கியின் விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான உள்ளடக்கங்களை மின்னணு வடிவில் காட்சிப்படுத்தும் உரிமையை ஹற்றன் நேஷனல் வங்கி தக்கவைத்துக் கொள்கிறது.

ட்.இஸ்லாமிய வங்கி(Islamic Banking) வாடிக்கையாளர்கள், SOLO Max தளத்தின் (SOLO Max Platforms) ஊடாக, இஸ்லாமிய வங்கியியல் கோட்பாடுகளுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகளை மட்டுமே மேற்கொள்ள உறுதியேற்கின்றனர்.

09. தயாரிப்புகளுக்கு ஒப்புதல் அங்கீகாரம் வழங்கப்படாமை

ஹற்றன் நேஷனல் வங்கி பின்வருவன தொடர்பாக எவ்வித பிரதிநிதித்துத்தையும் (Representation) வழங்குவதில்லை. அவற்றை அங்கீகரிப்பதில்லை (Endoresment), மேலும் அவற்றிற்காக எவ்விதப் பொறுப்பையும் ஏற்காது.

அ.எந்தவொரு வணிகரின் அல்லது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநரின் (தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் (Telecom Operators) மற்றும் SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகள், பற்று அட்டைகள் மற்றும் கடன் அட்டைகளை வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட) நம்பகத் தன்மை மற்றும் செயல்திறன் தொடர்பாக;

ஆ. SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தில் (SOLO Digital Payments Platforms) சேமிக்கப்படக்கூடிய மற்றும் மீட்டுப் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு தயாரிப்பு, சேவை, சலுகை, நம்பிம்பிக்கைக்குரிய திட்டம் அல்லது பிற பொருட்களின் பாதுகாப்பு, தரம், துல்லியம், நம்பகத்தன்மை, முழுமைத்தன்மை அல்லது சட்டப்பூர்வத்தன்மை தொடர்பாக; அல்லது SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தின் ஊடாக காட்சிப்படுத்தப்படும், விநியோகிக்கப்படும், வாங்கப்படும் அல்லது பணம் செலுத்தப்படும் எந்தவொரு ஆலோசனை, கருத்து, சலுகை, முன்மொழிவு, அறிக்கை, தரவு அல்லது பிற தகவல்கள் (இவை அனைத்தும் ஒருங்கிணைந்து உள்ளடக்கம் என குறிப்பிடப்படுகின்றன) தொடர்பாக;

இ. SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தைப் பயன்படுத்தி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கோ அல்லது மீட்டுப் பயன்படுத்துவதற்கோ வாடிக்கையாளருக்கு உள்ள திறன் தொடர்பாக; மேலும் SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தில் இடம்பெறும் எந்தவொரு உள்ளடக்கத்திலும் காணப்படும் பிழைகள் அல்லது விடுபாடுகள் தொடர்பாக ஹற்றன் நேஷனல் வங்கி எந்தவிதமான பொறுப்பையும் அல்லது சட்டப் பொறுப்பையும் ஏற்கவில்லை என்பதன் மூலம் வெளிப்படையாக அறிவிக்கிறது. மேலும், தனது பிரத்தியேகமான மற்றும் முழுமையான தீர்மானத்தின் அடிப்படையில், ஆட்சேபனைக்கு உரியதாகவோ, பிழையானதாகவோ, சட்டவிரோதமானதாகவோ, மோசடியானதாகவோ அல்லது இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு முரணானதாகவோ ஹற்றன் நேஷனல் வங்கி கருதும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ திருத்தவும், மாற்றியமைக்கவும் வெளியிட மறுக்கவும் அல்லது அகற்றவும் ஹற்றன் நேஷனல் வங்கிக்கு உரிமையுள்ளது. இருப்பினும், அவ்வாறு நடவடிக்கை எடுக்க ஹற்றன் நேஷனல் வங்கி எவ்விதமான கடமையையும் அல்லது பொறுப்பையும் ஏற்காது.

10. அறிவித்தல்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை

அ.SOLO டிஜிட்டல் கட்டணத் தளம் (SOLO Digital Payments Platforms) தொடர்பாக ஹற்றன் நேஷனல் வங்கி வழங்கும் அறிவித்தல்கள் (இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், கட்டணங்கள் மற்றும் சேவை கட்டணங்களின் அறிவித்தல் மற்றும் SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தைப் பயன்படுத்துவதற்கான செயற்பாட்டு அறிவித்தல்கள் உட்பட), அவ்வப்போது ஹற்றன் நேஷனல் வங்கியினால் வாடிக்கையாளரின் மொபைல் இலக்கத்திற்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலமாகவோ, வாடிக்கையாளர் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ, SOLO செயலி (SOLO app) ஊடாக அறிவித்தல் வழங்குவதன் மூலமாகவோ, SOLO இணையத்தளத்தில் (SOLO Website) வெளியிடுவதன் மூலமாகவோ அல்லது ஹற்றன் நேஷனல் வங்கி தனது பிரத்தியேகமான மற்றும் முழுமையான தீர்மானத்தின் அடிப்படையில் பொருத்தமானதாகக் கருதும் வேறு எந்த முறையிலும் வழங்கப்படலாம். அவ்வாறு வழங்கப்படும் அனைத்து அறிவித்தல்களும் வழங்கப்பட்டவுடனேயே வாடிக்கையாளரைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையவையாக அமையும். இவ்வாறான அறிவித்தல்களை மின்னணு வடிவில் பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர் தனது ஒப்புதலையும் சம்மதத்தையும் வழங்குகிறார். மேலும், மேற்கூறிய வழிமுறைகள் மூலம் ஹற்றன் நேஷனல் வங்கி வழங்கும் அனைத்து அறிவுறுத்தல்களையும் திறந்து பார்வையிட்டு அவற்றை ஆராய்ந்து வாடிக்கையாளரின் முழுப் பொறுப்பாகும். ஆ.வாடிக்கையாளர் ஹற்றன் நேஷனல் வங்கிக்கு அனுப்பும் எந்தவொரு அறிவுறுத்தல், கோரிக்கை அல்லது அறிவித்தலும், ஹற்றன் நேஷனல் வங்கியால் SOLO இணையத்தளத்தில் (SOLO Website) நிர்ணயிக்கப்பட்டுள்ள நடைமுறைக்கேற்ப, ஹற்றன் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தால் பெறப்பட்டு, அத்தகைய அறிவுறுத்தல், கோரிக்கை அல்லது அறிவித்தலின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஹற்றன் நேஷனல் வங்கிக்கு தேவையான நியாயமான கால அவகாசம் கிடைத்தப் பின்னரே, ஹற்றன் நேஷனல் வங்கியால் பெறப்பட்டதாகக் கருதப்படும். இ. SOLO கணக்கின் செயற்பாடுகளைத் தடுக்க, மாற்றியமைக்க, திருத்தியமைக்க அல்லது மீண்டும் ஆரம்பிக்குமாறு வழங்கப்படும் எந்தவொரு அறிவுறுத்தலும், அவை ஹற்றன் நேஷனல் வங்கியால் உரிய முறையில் சரிப்பார்க்கப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும். ஈ.மொபைல் தொலைபேசி இழந்தமை தொடர்பான அறிவித்தல்கள், சேவைகளை நிறுத்துமாறு வழங்கப்படும் அறிவித்தல்கள், உள்ளிட்ட (ஆனால் அவற்றுக்கு மட்டும் வரையறுக்கப்படாத) குறிப்பிட்ட நிகழ்வுகள் தொடர்பாக, வாடிக்கையாளர் ஹற்றன் நேஷனல் வங்கிக்கு அறிவிக்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை மற்றும் வடிவம் குறித்து தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்களை ஹற்றன் நேஷனல் வங்கி, SOLO Support மற்றும் SOLO இணையத்தளம் மூலமாக வழங்கும். உ.கணக்கு அறிக்கைகள்:

i. வாடிக்கையாளர், SOLO செயலி ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் தொடர்பான பரிவர்த்தனை அறிக்கைகள், அறிவுறுத்தல்கள், எச்சரிக்கை அறிவிப்புகள், உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டமை மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பான ஏனைய அறிக்கைகள் மற்றும் தகவல்களை அவை சரியானவையா, முழுமையானவையா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், அவை கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும். அவற்றில் ஏதேனும் ஆட்சேபனை, பிழை, விடுபாடு அல்லது முரண்பாடு இருப்பின், வாடிக்கையாளர் அதனை உடனடியாக எழுத்து மூலம் ஹற்றன் நேஷனல் வங்கிக்கோ அல்லது தொடர்புடைய கட்டணக் கருவியை வழங்கிய நிறுவனத்திற்கோ அறிவிக்க வேண்டும். அவ்வாறு எழுத்து மூலம் எந்தவொரு ஆட்சேபனையும் அறிவிக்கப்படாத பட்சத்தில், குறித்த பரிவர்த்தனை அறிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் இறுதியானவையாகவும், சரியானவையாகவும், முழுமையானவையாகவும், வாடிக்கையாளரைக் கட்டுப்படுத்தும் தன்மையுடையவையாகவும் கருதப்படும்.

11. தகராறுகளுக்கான தீர்வு (Dispute Resolution)

அ.வாடிக்கையாளரின் விசாரணைகளுக்கு பதிலளிப்பதற்கும், தகராறுகளைக் கையாளுவதற்கும் மற்றும் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் (இவை அனைத்தும் இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஒருங்கிணைந்து தகராறு எனக் குறிப்பிடப்படுகின்றன) SOLO Support சேவையை ஹற்றன் நேஷனல் வங்கி நிறுவி அதனை பராமரிக்கும்.

ஆ. SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகள் (SOLO Digital Payments Services) தொடர்பாக ஏதேனும் தகராறு ஏற்பட்டால், வாடிக்கையாளர் SOLO Support-ஐ தொடர்புக் கொள்வதன் மூலம் அதனை ஹற்றன் நேஷனல் வங்கிக்கு அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு தகராருக்கும் ஒரு குறிப்பு இலக்கம் வழங்கப்படும். அதன் பின்னர், குறித்த தகராறு விசாரணை மேற்கொள்வதற்கும் தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஹற்றன் நேஷனல் வங்கியின் தொடர்புடைய துறை அல்லது பிரிவிற்கு அனுப்பி வைக்கப்படும். பெறப்படும் அனைத்து முறைப்பாடுகளும் ஹற்றன் நேஷனல் வங்கியினால் முறையாகக் கண்காணிக்கப்பட்டு, அவற்றின் மீது உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இ.தகராறு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று வேலை நாட்களுக்குள் ஹற்றன் நேஷனல் வங்கி குறித்த தகராறு தொடர்பாக வாடிக்கையாளருக்கு பதிலளிக்கும். மேற்குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தகராறு தொடர்பான விசாரணையை ஹற்றன் நேஷனல் வங்கியினால் நிறைவு செய்ய முடியாத பட்சத்தில், அதே மூன்று நாட்களுக்குள், ஹற்றன் நேஷனல் வங்கி வாடிக்கையாளருக்கு ஒரு இடைக்காலப் பதிலை வழங்குவதுடன், இறுதிப் பதில் எப்போது வழங்கப்படும் என்பதையும் வாடிக்கையாளருக்கு அறிவிக்கும். வாடிக்கையாளரின் தகராறு நியாயமானது என ஹற்றன் நேஷனல் வங்கி தீர்மானிக்கும் பட்சத்தில், தகராறைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்களும் அந்த இறுதிப் பதிலில் வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படும். ஹற்றன் நேஷனல் வங்கி தகராறு தொடர்பான தனது பதிலை வாய்மொழியாகவோ அல்லது எழுத்துமூலமாகவோ வழங்கலாம்.

12. செயலிழக்கச் செய்தல் மற்றும் நிறுத்தல்

அ.வாடிக்கையாளர் தனது SOLO கணக்கை முடிவுறுத்த விரும்பினால், SOLO Support-ஐ தொடர்பு கொண்டு, அதன்மூலம் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் அவ்வாறு செய்யலாம்.

ஆ.வாடிக்கையாளர் SOLO கணக்கிலிருந்து ஏதேனும் ஒரு கட்டணக் கருவியை செயலிழக்கச் செய்யவோ அல்லது அகற்றவோ விரும்பினால், SOLO செயலியில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலமாகவோ அல்லது SOLO Support-ஐ தொடர்புக் கொண்டு, அதன்மூலம் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலமாகவோ அவ்வாறு செய்யலாம்.

இ. SOLO கணக்கை செயலிழக்கச் செய்வதற்கோ அல்லது முடிவுறுத்துவதற்கோ முன்னர், வாடிக்கையாளர் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து கட்டணங்களையும் மற்றும் அறவீடுகளையும் முழுமையாகச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால், அத்தகைய கட்டணங்கள் மற்றும் அறவீடுகளை பெறுவதற்காக SOLOவுடன் இணைக்கப்பட்டுள்ள கணக்குகளிலிருந்தோ அல்லது வாடிக்கையாளர் ஹற்றன் நேஷனல் வங்கியில் வைத்திருக்கும் வேறு எந்தக் கணக்கிலிருந்தோ தேவையான தொகையைப் பற்றுப் பதிவு செய்ய ஹற்றன் நேஷனல் வங்கிக்கு உரிமையுள்ளது.

ஈ.ஹற்றன் நேஷனல் வங்கிக்கு தனது முழுமையான மற்றும் தனிப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், வாடிக்கையாளர் அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பினரிடமும் எவ்வித பொறுப்பும் இன்றியே, SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளில் ஏதேனும் ஒரு சேவையையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளையோ, எந்த நேரத்திலும் மற்றும் எந்த காரணத்திற்காகவோ, ஏழு நாட்கள் முன் அறிவிப்பு வழங்குவதன் மூலமாகவோ அல்லது தனது விருப்புரிமையின் அடிப்படையில் முன் அறிவிப்பில்லாமலோ, இடைநிறுத்துவதற்கோ அல்லது முடிவுறுத்துவதற்கோ உரிமை உள்ளது.

உ.SOLO கணக்கு உட்பட SOLO டிஜிட்டல் கட்டணத்தளத்தின் ஏதேனும் ஒரு சேவையையோ அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட சேவைகளையோ முடிவுறுத்துவது, இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் தொடர்பாக வாடிக்கையாளருக்கு உள்ள பொறுப்புக்களையோ அல்லது வாடிக்கையாளரின் ஏனைய ஒப்பந்தக் கடப்பாடுகளையோ எந்தவிதத்திலும் பாதிக்காது. முடிவுறுத்தலின் பின்னர், பயனர் அங்கீகார விபரங்களை (User Credentials) செயலிழக்கச் செய்வது உட்பட (ஆனால் அதற்கு மட்டும் வரையறுக்கப்படாமல்), SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளுக்கான அணுகலைத் தடைசெய்வதற்கும், எதிர்காலத்தில் SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளுக்கான அணுகலை வழங்க மறுப்பதற்கும் ஹற்றன் நேஷனல் வங்கி தனது உரிமையைத் தக்கவைத்துக் கொள்கிறது.

ஊ.ஹற்றன் நேஷனல் வங்கிக்கு தனது பிரத்தியேகமான மற்றும் முழுமையான தீர்மானத்தின் (Sole and Absolute Discretion) அடிப்படையில், வாடிக்கையாளர் அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பினரிடமும் எந்தவிதமான பொறுப்பையும் ஏற்காமல், SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளின் பயன்பாடு தொடர்பாக பொதுவான நடைமுறைகள், கொள்கைகள் மற்றும் வரம்புகளை விதிப்பதற்கும், அதில் சில அல்லது அனைத்து SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளுக்கான அணுகலை கட்டுப்படுத்துவதற்கும் உரிமையுள்ளது.

எ. SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகள் சட்டவிரோதமான அல்லது அனுமதியற்ற நடவடிக்கைகள் மற்றும் நோக்கங்களுக்காக பணன்படுத்தப்படுகின்றன என்று .ஹற்றன் நேஷனல் வங்கி கருதும் பட்சத்தில், ஹற்றன் நேஷனல் வங்கிக்கு தனது முழுமையான தீர்மானத்தின் அடிப்படையில், எந்தவொரு முன் அறிவித்தலும் வழங்காமல், வாடிக்கையாளரின் SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளுக்கான அணுகலை இரத்துச் செய்வதற்கும் மற்றும் எதிர்காலத்தில் புதிய SOLO கணக்கொன்றை உருவாக்குவதற்கான அணுகலை வாடிக்கையாளருக்கு வழங்க மறுப்பதற்கு உரிமையுள்ளது.

13. இழப்பீடு (Indemnity)

வாடிக்கையாளர், ஹற்றன் நேஷனல் வங்கி, அதன் துணை நிறுவனங்கள் (Subsidiaries), இணை நிறுவனங்கள் (Affiliates), அவற்றின் பணிப்பாளர்கள் (Directores), அதிகாரிகள் (Officers), உரிமையாளர்கள் (Owners), முகவர்கள் (Agents), கூட்டு வர்த்தகர்கள் (Co- branders) அல்லது பிற கூட்டாளர்கள் (Partners), பணியாளர்கள் (Employees), தகவல் வழங்குநர்கள் (Information Providers), உரிமம் வழங்குநர்கள் (Licensors), உரிமம் பெற்றவர்கள் (Licensees), ஆலோசகர்கள் (Consultants), ஒப்பந்தக்காரர்கள் (Contractors) மற்றும் தொடர்புடைய ஏனைய மூன்றாம் தரப்பினர் (இதில் வரையறையின்றி, வணிகர்கள்(Merchants), பிற நிதி நிறுவனங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்கள் உட்பட) இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இழப்பீடு பெறத் தகுதியான தரப்பினர் என இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிடப்படுகின்றனர்) ஆகியோருக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களால் உருவாகும், அவற்றிலிருந்து தோன்றும் அல்லது அவற்றுடன் தொடர்புடைய எந்தவொரு மற்றும் அனைத்து கோரிக்கைகள், இழப்புகள், உரிமை கோரல், வழக்கு நடவடிக்கைகள், கடன்கள் அல்லது சட்டப்பொறுப்புகள் ஆகியவற்றிலிருந்தும் மற்றும் அவற்றிற்கு எதிராகவும், இழப்பீடு பெறத் தகுதியான தரப்பினரால் நியாயமான முறையில் ஏற்கப்பட்ட சட்டத்தரணிகளின் கட்டணங்கள் மற்றும் வழக்குச் செலவுகள் உட்பட (ஆனால் அவற்றிற்கு மட்டும் வரையறுக்கப்படாமல்) அவர்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கவும், அவர்களைப் பாதுகாக்கவும் மற்றும் எவ்வித இழப்பும் பொறுப்பும் ஏற்படாதவாறு பாதுகாக்கவும் வாடிக்கையாளர் இணங்குகிறார்.

i. வாடிக்கையாளரால் SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகள் பயன்படுத்தப்படுதல்
ii. SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளைப் பயன்படுத்துவதில் வாடிக்கையாளரின் கவனயீனம் அல்லது தவறுதல்.
iii. இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளிலுள்ள ஏதேனும் ஒரு விதிமுறையை வாடிக்கையாளர் மீறியிருத்தல் அல்லது அதனை பின்பற்றத் தவறியிருத்தல்.
iv. வாடிக்கையாளரின் செயல்கள் அல்லது செயலிழப்புகள் (Acts of Omissions) காரணமாக உருவாகும் எந்தவொரு தகராறு (Dispute)அல்லது நீதிமன்ற நடவடிக்கை (Litigation) மற்றும்;
v. பொருந்தக்கூடிய ஏதேனும் சட்டத்தையோ அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் உரிமைகளையோ வாடிக்கையாளர் மீறியிருத்தல் அல்லது மீறியதாகக் கூறப்படுதல் (Alleged violation).

14. பொறுப்புத் துறப்புகள் (Disclaimers) மற்றும் பொறுப்பின் வரம்புகள் (Limitations of Liability)

SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகள் தளம் (SOLO Digital Payments Services Platforms) மற்றும் அதனுடன் தொடர்புடையதாக வழங்கப்படும் அல்லது அதனூடாக அணுகக்கூடிய அனைத்து உள்ளடக்கங்கள் (Content), மென்பொருள் (Software), செயல்பாடுகள் (Functions), ஆவணங்கள் (Materials) மற்றும் தகவல்கள் (Informations) என்பன, அவை உள்ள நிலையிலேயே வழங்கப்படுகின்றன. சட்டத்தினால் அனுமதிக்கப்படும் உச்ச வரம்பிற்குட்பட்டு, ஹற்றன் நேஷனல் வங்கி, அதன் துணை நிறுவனங்கள் (Subsidiaries), இணை நிறுவனங்கள் (Affiliates), அவற்றின் பணிப்பாளர்கள் (Directores), அதிகாரிகள் (Officers), உரிமையாளர்கள் (Owners), முகவர்கள் (Agents), கூட்டு வர்த்தகர்கள் (Co- branders) அல்லது பிற கூட்டாளர்கள் (Partners), மேலும், சாதன உற்பத்தியாளர்கள் (Device Manufacturers) உட்பட (ஆனால் அவற்றிற்கு மட்டும் வரையறுக்கப்படாமல்) (இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஹற்றன் நேஷனல் வங்கி தரப்பினர் (HNB Parties) எனக் குறிப்பிடப்படுகின்றனர்), SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகள் தளத்தில் பயன்படுத்தப்படும் அல்லது அதனூடாக அணுகப்படும் மென்பொருளின் மூலம் கிடைக்கப்பெறும் சேவைகள், உள்ளடக்கங்கள், ஆவணங்கள் மற்றும் தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாகவோ அல்லது SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகள் தளத்தின் ஊடாக இரகசியமான மற்றும் உணர்திறன் வாய்ந்த தகவல்கள் (Sensitive Informations) பரிமாறப்படுவதுடன் தொடர்புடைய பாதுகாப்பு மீறல்கள் (Security Breaches) தொடர்பாகவோ, வெளிப்படையானதோ அல்லது மறைமுகமானதோ ஆகிய எவ்வித பிரதிநிதித்துவத்தையோ, உத்தரவாதத்தையோ அல்லது உறுதிமொழியையோ வழங்குவதில்லை ஒவ்வொரு ஹற்றன் நேஷனல் வங்கி தரப்பினரும், சேவைகள் தொடர்பாக, மூன்றாம் தரப்பினரின் உரிமைகளை மீறாமை வணிகப் பயன்பாட்டிற்கான தகுதி, குறிப்பிட்ட நேரத்திற்கான பொருத்தம் அல்லது வேறு எந்தவொரு வகையான உத்தரவாதமும் இருப்பதாக கருதப்படக்கூடிய அனைத்துவகை உத்தரவாதங்களையும் எவ்வித வரம்புமின்றி முழுமையாகத் துறக்கின்றனர். மேலும், SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகள் தளத்திலுள்ள செயல்பாடுகள் இடையூறின்றி, தொடர்ச்சியாக அல்லது பிழையின்றி செயற்படும் என ஹற்றன் நேஷனல் வங்கி தரப்பினர் எவ்வித உத்தரவாதமும் வழங்குவதில்லை. கணனி முறைமை செயலிழப்பு (System Failure), தொடர்பாடல் தடங்கல் அல்லது கட்டணப் பரிவர்த்தனைகளின் பெறுதல், செயலாக்கம், ஏற்றுக்கொள்ளல், நிறைவு செய்தல் அல்லது தீர்வு செய்தல் (Settlement) ஆகியவற்றையோ அல்லது SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளின் வழங்கலையோ பாதிக்கக்கூடிய ஏனைய இடையூறுகள் உட்பட (ஆனால் அவற்றிற்கு மட்டும் வரையறுக்கப்படாமல்), எந்தவொரு சேவைத் தடங்கள் (Service Interruption) காரணமாகவும் ஏற்படும் இழப்பு, சேதம் அல்லது விளைவுகளுக்கு ஹற்றன் நேஷனல் வங்கி தரப்பினர் எவ்விதப் பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள்.

அ. ஹற்றன் நேஷனல் வங்கி தரப்பினர், எந்தவொரு கட்டணக்கருவி தொடர்பான தகவல்களின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு எவ்விதப் பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள்; இதில் அவ்வாறான தகவல்கள் தற்போதையதாகவும், புதுப்பிக்கப்பட்டதாகவும் உள்ளனவா என்பதும் உட்பட, ஆனால் அதற்காக மாத்திரம் வரையறுக்கப்படாமல் இருக்கும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியத்தின் பொதுத்தன்மையை கட்டுப்படுத்தாமல், வாடிக்கையாளர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்வது என்னவெனில், இத்தகைய தகவல்கள், அதற்குரிய வழங்குநர் நிறுவனத்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிலவரத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பதும், அவை SOLO டிஜிட்டல் கட்டணத்தளம் மூலம் வாடிக்கையாளருக்கு காட்சிப்படுத்தப்படும் நேரத்திலோ அல்லது வாடிக்கையாளர் கொள்முதல் அல்லது மீட்பு மேற்கொள்ளும் நேரத்திலோ, வாடிக்கையாளரின் அன்றைய பரிவர்த்தனைகள், கிடைக்கக்கூடிய நிலுவைத் தொகை அல்லது பிற கணக்கு / திட்ட விபரங்களை முழுமையாக அல்லது துல்லியமாகப் பிரதிபலிக்காமல் இருக்கலாம் என்பதாகும். இதன் விளைவாக, இத்தகைய பரிவர்த்தனைகள் காரணமாக வாடிக்கையாளருக்கு கூடுதல் கட்டணங்கள் மற்றும் பிற செலவுகள் ஏற்படக்கூடும்; மேலும், வாடிக்கையாளர் மேற்கொள்ளும் கொள்முதல் அல்லது மீட்பு முயற்சிகள் நிறைவேறாமல் போகும் வாய்ப்புள்ளது.

ஆ.எந்தவொரு சூழ்நிலையிலும், ஹற்றன் நேஷனல் வங்கி தரப்பினரில் எவரும், வாடிக்கையாளர் அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பினரிடமும், மறைமுகமான, தொடர்ச்சியான அல்லது அதன் விளைவாக ஏற்படும் விசேட தன்மையுடைய அல்லது எடுத்துக்காட்டாக விதிக்கப்படும் எந்தவொரு இழப்பீடு, சேதம் அல்லது இழப்பிற்கும் பொறுப்பேற்க மாட்டார்கள். இதில் இலாப இழப்பு, நற்பெயர் அல்லது வணிக நற்பெயர் இழப்பு, பயன்பாட்டு இழப்பு, தரவு இழப்பு அல்லது ஏனைய தொட்டுணரமுடியாத இழப்புகள் உட்பட (ஆனால் அவற்றிற்கு மட்டும் வரையறுக்கப்படாமல்) ஹற்றன் நேஷனல் வங்கி தரப்பினர், SOLO டிஜிட்டல் கட்டணத்தளம் அல்லது அதன் மூலம் வாங்கப்பட்ட, பெறப்பட்ட, விற்கப்பட்ட அல்லது பணம் செலுத்தப்பட்ட பொருட்கள், சேவைகள் அல்லது தகவல்கள் தொடர்பாக ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் அல்லது சேதத்திற்கும் பொறுப்பேற்கமாட்டார்கள். கோரிக்கையின் தன்மை அல்லது அதனை அடிப்படையாகக் கொண்ட சட்ட நடவடிக்கையின் இயல்பு எதுவாக இருப்பினும், மேலும் அத்தகைய சேதம் அல்லது இழப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் குறித்து ஹற்றன் நேஷனல் வங்கி தரப்பினர் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தாலும்கூட, மேற்கூறிய பொறுப்புத் துறப்பு முழுமையாகப் பொருந்தும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் அல்லது அவற்றுடன் தொடர்புடைய வகையில், ஹற்றன் நேஷனல் வங்கி தரப்பினருக்கு ஏற்படக்கூடிய மொத்த சட்டப்பொறுப்பும் குறித்த கோரிக்கையுடன் தொடர்புடைய கட்டணப் பரிவர்த்தனையின் மதிப்பை மீறாது.

இ. இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்பின் வரம்புகளில் நம்பிக்கையுடைய ஒவ்வொரு தரப்பினரும் இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் இணைந்துள்ளதையும், அப்பொறுப்பு வரம்புகள் இரு தரப்பினருக்கும் இடையிலான இவ்வொப்பந்தத்தின் அடிப்படையான மற்றும் இன்றியமையாத நிபந்தனையாக அமைந்துள்ளதையும் ஒவ்வாத தரப்பினரும் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கின்றனர். மேற்கூறியவற்றிற்கு மேலதிகமாகவும், அவற்றை எவ்விதத்திலும் வரையறுக்காமலும், ஹற்றன் நேஷனல் வங்கி தரப்பினரின் நியாயமானக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எந்தவொரு சூழ்நிலையினாலும் ஏற்படும் செயல்படுத்த தவறுதல் அல்லது தாமதம் தொடர்பாக ஹற்றன் நேஷனல் வங்கி தரப்பினரில் எவரும் எவ்விதப் பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள். இதில், அரசாங்க நடவடிக்கைகள், பயங்கரவாத செயல்கள், நிலநடுக்கம், தீ விபத்து, வெள்ளம், பிற இயற்கை அனர்த்தங்கள், தொழிலாளர் தொடர்பான சூழ்நிலைகள், மின்சாரத்தடை மற்றும் இணையத் தொடர்பு தடங்கல்கள் ஆகியவை உட்படுகின்றன; இருப்பினும் இவ்வாறு குறிப்பிடப்பட்டவற்றிற்கு மாத்திரம் இவ்விதிமுறைகள் வரையறுக்கப்படுவதில்லை.

15. இதர விதிமுறைகள் (Miscellaneous)

அ.இடைநிறுத்தப்பட்டுள்ள SOLO கணக்கை மீள செயல்படுத்துவதற்கு முன்னர், ஹற்றன் நேஷனல் வங்கி தனது முழுமையான மற்றும் பிரத்தியேகமான தீர்மானத்தின் அடிப்படையில், ஹற்றன் நேஷனல் வங்கி குறிப்பிடும் ஆவணங்களை வாடிக்கையாளர் சமர்ப்பிக்குமாறு கோருவதற்கு உரிமையுடையதாகும்.

ஆ. SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தை பயன்படுத்துவதன் விளைவாக ஏற்படக்கூடிய பொருந்தக்கூடிய அனைத்து வரிகளையும் அறிவித்தல் மற்றும் செலுத்துதல் என்பன முழுமையாக வாடிக்கையாளரின் பொறுப்பாகும். மேலும், SOLO டிஜிட்டல் கட்டணத் தளத்தைப் பயன்படுத்துவதன் தொடர்பில் பொருந்தக்கூடிய அனைத்து வரிச் சட்டங்களையும் வாடிக்கையாளர் கடைப்பிடிக்க வேண்டும்.

இ. ஹற்றன் நேஷனல் வங்கி தனது பிரத்தியேகமான மற்றும் முழுமையான தீர்மானத்தின் அடிப்படையில், வாடிக்கையாளரிடம் எவ்விதப் பொறுப்பும் ஏற்காமல், வாடிக்கையாளருக்கு அறிவித்தல் வழங்குவதன் மூலம், இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் எந்தவொரு பகுதியையும் எந்த நேரத்திலும் மாற்றுவதற்கும், திருத்துவதற்கும் அல்லது திருத்தியமைப்பதற்கும் உரிமையுள்ளது.

ஈ. ஹற்றன் நேஷனல் வங்கி தனது பிரத்தியேகமான மற்றும் முழுமையான தீர்மானத்தின் அடிப்படையில், வாடிக்கையாளரிடம் எவ்விதப் பொறுப்பும் ஏற்காமல், வாடிக்கையாளருக்கு அறிவித்தல் வழங்குவதன் மூலம், SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளை எந்த நேரத்திலும் மாற்றுவதற்கும், திருத்துவதற்கும் அல்லது திருத்தியமைப்பதற்கும் உரிமையுள்ளது.

உ.ஹற்றன் நேஷனல் வங்கியின் முன்கூட்டிய எழுத்துமூல அனுமதியின்றி, சட்டத்தின் செயற்பாட்டின் மூலமாகவோ அல்லது வேறு எந்த முறையிலோ, இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் வாடிக்கையாளருக்கு உள்ள எந்தவொரு உரிமையையோ அல்லது கடமையையோ வேறொருவருக்கு மாற்றவோ ஒப்படைக்கவோ வாடிக்கையாளருக்கு உரிமையில்லை. அவ்வாறு மேற்கொள்ளப்படும் எந்தவொரு உரிமை அல்லது கடமை மாற்றமும் செல்லுப்படியாகாது. எந்தவொரு அறிவித்தலோ அல்லது ஒப்புதலோ இன்றி, இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும், அவற்றின் கீழ் ஹற்றன் நேஷனல் வங்கிக்கு உள்ள உரிமைகள் மற்றும் கடமைகளையும் எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் சுதந்திரமாக மாற்றி ஒப்படைக்க ஹற்றன் நேஷனல் வங்கி தனது உரிமையைத் தக்கவைத்துக் கொள்கிறது. மேற்கூறியவற்றிற்கு உட்பட்டு, இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இவற்றின் தரப்பினரையும், அவர்களின் சட்டபூர்வ வாரிசுகளையும் மற்றும் அனுமதிக்கப்பட்ட உரிமை மாற்றம் பெற்றவர்களையும் கட்டுப்படுத்துவதுடன் அவர்களின் நன்மைக்காகவும் அமல்படுத்ததக்கதாகவும் இருக்கும்.

ஊ.ஹற்றன் நேஷனல் வங்கி வாடிக்கையாளருக்கு வழங்கும் SOLO டிஜிட்டல் கட்டணச் சேவைகளும் அதனுடன் தொடர்புடைய இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் சட்டங்களினால் நிர்வகிக்கப்படும். மேலும், இவை தொடர்பான அனைத்து விடயங்களும் இலங்கையின் தகுதிவாய்ந்த நீதிமன்றங்களின் பிரத்தியேக அதிகார வரம்பிற்கு உட்பட்டவையாகும்.

வாடிக்கையாளர் கணக்குகள், வங்கித் தொடர்புகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும் விதிமுறைகள்

1. பயன்பாடு (Application)

இப்பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (சூழ்நிலை அனுமதிக்கும் மற்றும் அவசியப்படுத்தும் இடங்களில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எனக் குறிப்பிடப்படும்; இவ்வெளிப்பாடு, இவ்வாவணத்திலுள்ள இலங்கை ரூபாய் அல்லது வேறு எந்த நாணயத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள சேனல் வங்கி சேவைகள் மற்றும் சேமிப்பு கணக்குகள் தொடர்பான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும் உள்ளடக்கும்) ஹற்றன் நேஷனல் வங்கி பிஎல்சி (HNB) (பதிவு இலக்கம் PQ 82) (இனி HNB அல்லது வங்கி எனக் குறிப்பிடப்படும்). அதன் சட்டப்பூர்வ வாரிசுகள் மற்றும் உரிமை மாற்றம் பெற்றவர்கள் ஆகியோருடனான வாடிக்கையாளரின் கணக்குகள், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்களுக்கு பொருந்தும். இவ்வெளிப்பாட்டில் ஹற்றன் நேஷனல் வங்கியின் எந்தவொரு கிளையும் அடங்கும்.

இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (தேவையான மாற்றங்களுடன்/ தேவையான விபர மாற்றங்களுடன்) தனிநபர்கள், கூட்டாண்மைகள், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், பதிவு செய்யப்படாத அமைப்புகள் உள்ளிட்ட (ஆனால் அவற்றிற்கு மட்டும் வரையறுக்கப்படாமல்) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எந்த நேரத்திலும் மாற்றவும், திருத்தவும் அல்லது மேலதிக விதிகளை சேர்க்கவும் வங்கிக்கு உரிமையுள்ளது. அவ்வாறான எந்தவொரு மாற்றம், திருத்தம் அல்லது சேர்த்தலும் அனைத்து வாடிக்கையாளர்களையும் கட்டுப்படுத்தும் வகையில் அமுல்பெற்றதாகக் கருதப்படும்.
இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு திருத்தமும் ஹற்றன் நேஷனல் வங்கியின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

2. வங்கிக் கணக்கு (Bank Account)

கணக்குத் திறப்பு விண்ணப்பப் படிவத்தில் (Account Opening Application Form) வழங்கப்பட்டுள்ள கணக்கு இயக்க அறிவுறுத்தல்களுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பத்திரத்தின் அடிப்படையில், வாடிக்கையாளர் அதற்கு மாறான எழுத்துமூல அறிவிப்பை வங்கிக்கு வழங்கும் வரை, முறையாக கையொப்பமிடப்பட்ட எந்தவொரு அறிவுறுத்தலின் அல்லது ஆவணத்தின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்க வங்கிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. அதன்படி, வங்கிக்கு பின்வரும் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

i. நிலையான கட்டண அறிவுறுத்தல்கள், நேரடிப் பற்று பதிவுகள், வங்கி வரவோலைகள், அஞ்சல் மற்றும் தந்தி/ மின்னணு பணபரிமாற்றங்கள், பத்திரங்களின் மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் கொள்வனவு மற்றும் விற்பனை ஆகியவற்றை மேற்கொள்ளவும், மேலும் குறித்த கணக்கிலிருந்து தொகையைப் பற்று பதிவு செய்து, அதனுடன் தொடர்புடைய அல்லது வேறு எந்தவொரு அறிவுறுத்தலையும் நடைமுறைப்படுத்தவும்.

ii. குறித்த கணக்கு தொடர்பான ஏனைய அனைத்து அறிவுறுத்தல்களையும், அதில் கணக்கை மூடுவதற்கான அறிவுறுத்தல்களும் உட்பட, ஏற்றுக்கொண்டு அதன்படி நடவடிக்கை எடுக்கவும்.

3. வைப்புகள் மற்றும் பணப் பெறுதல்கள் (Deposits and Withdrawals)

கணக்குத் திறப்பு விண்ணப்பப் படிவத்தில் (Account Opening Application Form) வழங்கப்பட்டுள்ள கணக்கு இயக்க அறிவுறுத்தல்களுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பத்திரத்தின் அடிப்படையில், வாடிக்கையாளர் அதற்கு மாறான எழுத்துமூல அறிவிப்பை வங்கிக்கு வழங்கும் வரை, முறையாக கையொப்பமிடப்பட்ட எந்தவொரு அறிவுறுத்தலின் அல்லது ஆவணத்தின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்க வங்கிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. அதன்படி, வங்கிக்கு பின்வரும் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

i. நிலையான கட்டண அறிவுறுத்தல்கள், நேரடிப் பற்று பதிவுகள், வங்கி வரவோலைகள், அஞ்சல் மற்றும் தந்தி/ மின்னணு பணபரிமாற்றங்கள், பத்திரங்களின் மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் கொள்வனவு மற்றும் விற்பனை ஆகியவற்றை மேற்கொள்ளவும், மேலும் குறித்த கணக்கிலிருந்து தொகையைப் பற்று பதிவு செய்து, அதனுடன் தொடர்புடைய அல்லது வேறு எந்தவொரு அறிவுறுத்தலையும் நடைமுறைப்படுத்தவும்.

ii. குறித்த கணக்கு தொடர்பான ஏனைய அனைத்து அறிவுறுத்தல்களையும், அதில் கணக்கை மூடுவதற்கான அறிவுறுத்தல்களும் உட்பட, ஏற்றுக்கொண்டு அதன்படி நடவடிக்கை எடுக்கவும்.

4. கணக்குகளைப் பராமரித்தல் (Maintaining Accounts)

I. காலாந்திர இருப்பு அறிக்கைகள் (Periodic Balance Statements)
வேறுவிதமாக எழுத்துமூலமாக ஒப்புக்கொள்ளப்படாத வரையில், வாடிக்கையாளரின் கணக்கிற்கான காலாந்திர இருப்பு அறிக்கையை வங்கி தன்னால் நிர்ணயிக்கப்படும் கால இடைவெளிகளில் வாடிக்கையாளருக்கு வழங்கும்.

II. எதிர்ப்பு தெரிவிப்பதற்கான கால அவகாசம் (Time Allowed for Objection)
வாடிக்கையாளருக்கு கிடைக்கப்பெற்ற காலாந்திர இருப்பு அறிக்கையின் சரியான தன்மை அல்லது முழுமை தொடர்பாக வாடிக்கையாளருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், அவ்வாட்சேபனை தாமதமின்றி முன்வைக்கப்பட வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், குறித்த இருப்பு அறிக்கையைப் பெற்ற உடனேயே, அந்த ஆட்சேபனை எழுத்துமூலமாக வங்கிக்குக் கிடைக்கப்பெற வேண்டும். மேற்குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எந்தவொரு ஆட்சேபனையும் வங்கிக்கு கிடைக்கப்பெறாத பட்சத்தில், அந்த காலாந்திர இருப்பு அறிக்கை சரியானதாகவும், முழுமையானதாகவும், வாடிக்கையாளரை கட்டுப்படுத்தும் வகையில் இறுதியானதாகவும் கருதப்படும்.

5. சேமிப்பு கணக்குகள் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

I. வைப்பு தொகைகள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் செலுத்தப்படலாம். இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பிரிவு 3 இன் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, பணப் பெறுதல்களும் வங்கியின் எந்தவொரு கிளையிலும் மேற்கொள்ளப்படலாம்.

II. நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இருப்பு தொகையை கொண்டிருக்காததுடன், தொடர்ந்து இருபத்து நான்கு(24) மாதங்களுக்கு மேலாக செயலற்ற நிலையிலுள்ள எந்தவொரு கணக்கையும் வங்கி மூடுவதற்கு உரிமையுடையதாகும்.

III. காசோலைகள், வங்கி வரவோலைகள் மற்றும் அவற்றின் மூலம் பெறப்படும் தொகைகள், வங்கியின் முழுமையான மற்றும் பிரத்தியேகமான தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படலாம்.

IV. ஒவ்வொரு நாளின் இறுதி இருப்புத் தொகையின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டு, மாதாந்த அடிப்படையில் கணக்கில் வரவு வைக்கப்படும். எனினும், வட்டி கணக்கிடப்படும் ஒவ்வொரு நாளிலும் கணக்கில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இருப்பு தொகை காணப்பட வேண்டும்.

V. சேமிப்பு கணக்கு வைத்திருப்பவருக்கு சேமிப்பு கணக்குப் புத்தகம் வழங்கப்படும். அதன் பாதுகாப்பை உறுதி செய்வது முழுமையாக கணக்கு வைத்திருப்பவரின் பொறுப்பாகும். கணக்குப் புத்தகம் திருடப்பட்டாலோ அல்லது தவறவிடப்பட்டாலோ, அது தொடர்பாக வங்கிக்கு தாமதமின்றி எழுத்துமூலமாக அறிவிக்கப்பட வேண்டும். மேலும், கணக்குப் புத்தகத்திற்கு பதிலாக பரிவர்த்தனைகளின் மின்னணு அறிக்கையை (e-Statement) கோருவதற்கான விருப்பமும் வாடிக்கையாளருக்கு உள்ளது.

VI. கணக்குப் புத்தகம் வங்கிக் கவுன்டரில் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பங்களில், பொருந்தும் இடங்களில், செலுத்தப்படும் மற்றும் பெறப்படும் அனைத்து தொகைகளும் வங்கியால் கணக்குப் புத்தகத்தில் பதிவு செய்யப்படும். கணக்கு வைத்திருப்பவர், வங்கியை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், கணக்குப் புத்தகத்தில் செய்யப்பட்ட அனைத்து பதிவுகளையும் கவனமாக சரிப்பார்த்து, அவை சரியானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் முரண்பாடு அல்லது பிழை காணப்பட்டால், அது தொடர்பாக உடனடியாக வங்கிக்கு அறிவிக்கப்பட வேண்டும்.

VII. கணக்குப் புத்தகத்தில் அனைத்து பரிவர்த்தனைகளும் பதிவு செய்யப்படுவதற்காக, குறைந்தது ஆறு (06) மாதங்களுக்கு ஒருமுறை, கணக்குப் புத்தகம் வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கணக்குப் புத்தகம் சமர்ப்பிக்கப்படும் திகதியிலிருந்து மூன்று (03) ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் கணக்குப் புத்தகத்தில் பதிவு செய்யப்படமாட்டாது. சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட பதிவுகளைப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய காலவரம்பை மீறிய பரிவர்த்தனைப் பதிவுகளை வங்கி பராமரிக்காது.

VIII. இப்பிரிவின் உட்பிரிவு (vii)க்கு உட்பட்டு, கணக்குப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாத பரிவர்த்தனை அறிக்கைகளை, சாதாரண தபால் மூலமாக, தனது முழுமையான தீர்மானத்தின் அடிப்படையில் அனுப்புவதற்கான உரிமையை வங்கி தக்கவைத்துக் கொள்கிறது.

IX. கணக்கு வைத்திருப்பவர், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (Automated Teller Machine -ATM) மூலமாகவோ அல்லது வங்கி கவுன்டரில், கணக்குப் புத்தகத்தையும், முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பணப்பெறுதல் விண்ணப்பப்படிவத்தையும் சமர்ப்பிப்பதன் மூலம் பணத்தைப் பெறலாம். வங்கி கவுன்டரில் பணப்பெறுதல் மேற்கொள்ளப்படும் போது, சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர் தனது கணக்குப் புத்தகம், தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பணப்பெறுதல் விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

X. ATM மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையும், அந்த இயந்திரத்தின் பயன்பாட்டிற்குப் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.

6. சேனல் வங்கிச் சேவைகளுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

(அ) இணைய வங்கி சேவை

I. இணைய வங்கிச் சேவை பயன்படுத்துவதற்கு தேவையான அடையாளம் மற்றும் கடவுச்சொல் ஆகியவை மிகவும் இரகசியமானவை. அவை எந்தவொரு சூழ்நிலையிலும், எந்தவொரு நபரிடமும் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தப்படக்கூடாது.

II. வாடிக்கையாளரின் பயனர் அடையாளம் மற்றும் கடவுச்சொல் அங்கீகாரம் பெறாத எந்தவொரு நபரின் கையிலும் சென்றுள்ளது அல்லது சென்றிருக்கக்கூடும் என வாடிக்கையாளர் அறிந்தவுடன் அல்லது சந்தேகிக்கும் உடனேயே அதனை தாமதமின்றி வங்கிக்கு அறிவிக்க வேண்டும்.

III. இணைய வங்கிச் சேவை(Internet Banking) மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகள் தொடர்பான வங்கியின் பதிவுகள் மற்றும் கணக்கு அறிக்கைகள் அவ்வாறான பரிவர்த்தனைகள் நடைபெற்றமைக்கான போதுமானதும் இறுதியுமான சான்றாக (Sufficient and Conclusive Evidence) கருதப்படும். அவை அனைத்து நோக்கங்களுக்காகவும் இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரை கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டதாக இருக்கும்.

IV. இணைய வங்கிச் சேவை(Internet Banking) மூலம் வாடிக்கையாளரால் வழங்கப்படும் எந்தவொரு அறிவுறுத்தலையும், தனது முழுமையான மற்றும் பிரத்தியேகமான தீர்மானத்தின் அடிப்படையில், திருத்துவதற்கோ, செயல்படுத்தாமல் இருப்பதற்கோ அல்லது அதன் செயலாக்கத்தை தாமதப்படுத்துவதற்கோ வங்கிக்கு உரிமையுள்ளது.

V. சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுப்படுத்துவது என்னவெனில், சேமிப்பு கணக்கிற்கும் மற்றும் இணைய வங்கிச் சேவை மூலம் இயக்கப்படும் ஏனைய பொருந்தக்கூடிய கணக்குகளுக்கும் பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும், இணைய வங்கிச் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கும் முழுமையாகப் பொருந்தும் மற்றும் அவரை கட்டுப்படுத்தும்.

VI. இணைய வங்கிச் சேவை(Internet Banking) பயன்படுத்தப்படுவது, வங்கியால் அவ்வப்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்படலாம். மேலும், தனது முழுமையான மற்றும் பிரத்தியேகமான தீர்மானத்தின் அடிப்படையில், எந்த நேரத்திலும் முன்னறிவித்தலுடன் அல்லது பொருந்தும் சட்டங்களுக்குட்பட்டு, இச்சேவையை விலக்கிக் கொள்ளவும் அல்லது நிறுத்தவும் வங்கிக்கு உரிமையுள்ளது.

VII. மென்பொருள் மற்றும் ஆவணங்களுக்கான உரிமம் (License for Software and Documentation)
வங்கி, மின்னணு வங்கிச் சேவைகளை (இதில் இணைய வங்கிச் சேவை உட்பட, ஆனால் அதற்கு மட்டும் வரையறுக்கப்படாமல்) வாடிக்கயைாளருக்கு வழங்கும் போது, அவற்றைப் பயன்படுத்துவதற்காக வங்கியால் வழங்கப்படும் மின்னணு வங்கிச் சேவை மென்பொருள் (Electronic Banking Software), அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் அவற்றின் திருத்தப்பட்ட பதிப்புகள் (இவை அனைத்தும் ஒருங்கிணைந்து மின்னணு வங்கிச் சேவைப் பொருட்கள் (Electronic Banking Materials) எனக் குறிப்பிடப்படுகின்றன) ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு, வங்கியின் மின்னணு வங்கிச் சேவைகளை அணுகுவதற்காக வாடிக்கையாளர் தெரிவு செய்துள்ள கணனி உபகரணங்களில் பயன்படுத்துவதற்கான பிரத்தியேகமற்ற உரிமத்தை(Non- Exclusive License) வங்கி வழங்கும். அத்தகைய கணனி உபகரணங்களுக்கும் (Computer Equipment) அவற்றுடன் தொடர்புடைய தொடர்பு வசதிகளுக்கும் முழுப் பொறுப்பும் வாடிக்கையாளருக்கே உரியது. வாடிக்கையாளர், மின்னணு வங்கிச் சேவைப் பொருட்களை எப்பொழுதும் மிகவும் இரகசியமாக பாதுகாக்க வேண்டும். மேலும், வங்கியின் முன்கூட்டிய எழுத்துமூல அனுமதியின்றி, பாதுகாப்பு நோக்கத்துக்காக மின்னணு வங்கிச் சேவை மென்பொருளின் காப்புப் பிரதியை உருவாக்குவதை தவிர, அவற்றை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, நகலெடுக்கவோ அல்லது வேறு எந்த நபருக்கும் அவற்றைப் பயன்படுத்தவோ அல்லது அணுகவோ அனுமதிக்கக் கூடாது. மின்னணு வங்கிச் சேவைப் பொருட்கள் அவற்றின் அனைத்து நகல்களும், அவற்றுடன் தொடர்புடைய அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளும் எல்லாக் காலங்களிலும் வங்கியின் பிரத்தியேக சொத்தாகவே தொடரும்.

VIII. இணைய வங்கிச் சேவை(Internet Banking) மூலம் ஒரு பரிவர்த்தனை நிறைவடைந்தவுடனேயே, தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது அதற்கு ஒத்த தொழில்நுட்ப காரணங்களால் கணக்கின் நிகழ்நேர இருப்புத் தொகை (Online Balance) உடனடியாகக் கிடைக்காதிருப்பதற்கோ அல்லது புதுப்பிக்கப்படாதிருப்பதற்கோ வங்கி எவ்விதப் பொறுப்பையும் ஏற்காது.

(ஆ) மொபைல் வங்கிச் சேவை

I. மொபைல் வங்கிச் சேவையை (Mobile Phone Banking) பயன்படுத்துவதற்குத் தேவையான பயனர் அடையாளம்(User ID) மற்றும் கடவுச்சொல்(Password) ஆகியவை மிகவும் இரகசியமானவை. அவை எந்தவொரு சூழ்நிலையிலும், எந்நேரத்திலும் எந்தவொரு நபரிடமும் வெளிப்படுத்தப்படக்கூடாது.

II. வாடிக்கையாளரின் பயனர் அடையாளம் மற்றும் கடவுச்சொல் அங்கீகாரம் பெறாத எந்தவொரு நபரின் கையிலும் சென்றுள்ளது அல்லது சென்றிருக்கக்கூடும் என வாடிக்கையாளர் அறிந்தவுடன் அல்லது சந்தேகிக்கும் உடனேயே அதனை தாமதமின்றி வங்கிக்கு அறிவிக்க வேண்டும்.

III. மொபைல் வங்கிச் சேவை (Mobile Phone Banking) மூலம் செயலாக்கப்படும் அனைத்து பரிவர்த்தனைகள் தொடர்பாக வங்கியின் பதிவுகள் மற்றும் கணக்கு அறிக்கைகள், அவ்வாறான பரிவர்த்தனைகள் இடம்பெற்றதற்கான போதுமானதும் இறுதியுமான சான்றாக கருதப்படும். அவை அனைத்து நோக்கஙகளுக்காகவும், மொபைல் வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரை கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தத்தக்கதாக இருக்கும்.

IV. மொபைல் வங்கிச் சேவை (Mobile Phone Banking) மூலம் வாடிக்கையாளரால் வழங்கப்படும் எந்தவொரு அறிவுறுத்தலையும், தனது முழுமையான மற்றும் பிரத்தியேகமான தீர்மானத்தின் அடிப்படையில், திருத்துவதற்கோ, செயல்படுத்தாமல் இருப்பதற்கோ அல்லது அதன் செயலாக்கத்தை தாமதப்படுத்துவதற்கோ வங்கிக்கு உரிமையுள்ளது.

V. மொபைல் வங்கிச் சேவை (Mobile Phone Banking) பயன்பாடு, வங்கியால் அவ்வப்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்படலாம். மேலும், தனது முழுமையான மற்றும் பிரத்தியேகமான தீர்மானத்தின் அடிப்படையில், எந்நேரத்திலும் இச்சேவையை இடைநிறுத்தவோ அல்லது திரும்பப் பெறவோ வங்கிக்கு உரிமையுள்ளது.

VI. தொழில்நுட்பக் கோளாறு (Technical Failure) அல்லது தொழில்நுட்பக் காரணங்களால் குறுஞ்செய்திகள்(SMS) வாடிக்கையாளருக்கு கிடைக்காதிருப்பதற்காக வங்கி எவ்விதப் பொறுப்பையும் ஏற்காது. மொபைல் வங்கிச் சேவையைப் பயன்படுத்துவதற்கு தேவையான சாதனங்களை தெரிவு செய்வதும், அவற்றைப் பராமரிப்பதும், அவற்றுடன் தொடர்புடைய தொடர்பாடல் இணைப்பை ஏற்படுத்தி பராமரிப்பதும் முழுமையாக வாடிக்கையாளரின் பொறுப்பாகும்.

VII. ஒரு பரிவர்த்தனையை செயலாக்குவதற்காக நாணய மாற்று விகிதங்கள் (Currency Conversion Rates) பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், குறுஞ்செய்தி அறிவுப்புகள் (SMS Alerts) மூலம் ஏறத்தாழ மதிப்பு மட்டுமே காட்சிப்படுத்தப்படும்.

VIII. வங்கி வேறுவிதமாகத் தீர்மானிக்காத வரையில், ஒன்றுக்கு மேற்பட்ட பணிப்பாளர்களைக் கொண்ட நிறுவன வாடிக்கையாளர்கள் உட்பட வணிக நிறுவனங்களுக்கு மொபைல் வங்கி சேவை (Mobile Phone Banking) வழங்கப்படமாட்டாது.

(இ) ATM வங்கிச் சேவைகள் (ATM Banking)

வாடிக்கையாளர் பின்வருவனவற்றை ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்க ஒப்புக்கொள்கிறார்.

I. எல்லா நேரங்களிலும், அட்டையை(Card) (சந்தேகத்திற்கு இடமின்றி, இங்கு பயன்படுத்தப்படும் அட்டை(Card) என்ற சொல் பற்று அட்டையை( Debit Card) குறிக்கும் கடன் அட்டையை(Credit Card) குறிக்காது) வங்கியின் சொத்தாகக் கருதி, வங்கி கோரியவுடன் எவ்வித நிபந்தனைகளும், மறுப்புமின்றி உடனடியாக வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும்.

II. கணக்கில், பணப்பெறுதல் அல்லது பணமாற்றம் மேற்கொள்ள தேவையான போதுமான நிதி இல்லாத எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அட்டையைப் பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்த முயற்சிக்கவோ கூடாது.

III. அட்டை மாற்றிக் கொடுக்கவோ, வேறொருவரிடம் பயன்படுத்த அனுமதமிக்கவோ இயலாததால், அதனை வாடிக்கையாளர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

IV. அட்டை இரத்து செய்யப்பட்தாகவோ அல்லது திரும்பப் பெறப்பட்டதாகவோ வங்கியினாலோ அல்லது வங்கியின் சார்பாகச் செயற்படும் எந்தவொரு நபரினாலோ அறிவிக்கப்பட்ட பின்னர், அட்டையைப் பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்த முயற்சிக்கவோ கூடாது.

V. வங்கியின் ATM- இல் அட்டையைப் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அடையாள எண் (Personal Identification Number- PIN) எந்தவொரு சூழ்நிலையிலும், எந்தவொரு நபரிடமும் வெளிப்படுத்தப்படக்கூடாது.

VI. அட்டை தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ, அது குறித்து தாமதமின்றி வங்கிக்கு அறிவிக்க வேண்டும். மேலும், அட்டைக்கான மாற்று அட்டையை(Replacement Card) வழங்குவதற்காக வங்கி நிர்ணயிக்கும் கட்டணத்தை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும்.

VII. அட்டையின் பயன்பாட்டின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இருப்பினும், அட்டை தொலைந்தது, திருடப்பட்டது அல்லது PIN அங்கீகாரம் பெறாத நபரால் பெற்றுக்கொள்ளப்பட்டது (Unauthorized Acquisition) தொடர்பான அறிவிப்பை வங்கிப் பெற்றுக்கொண்டதாக வாடிக்கையாளருக்கு உறுதிப்படுத்திய பின்னர் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர் பொறுப்பேற்கமாட்டார்.

VIII. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உட்பிரிவு (vii) க்கு உட்பட்டு, ATM மூலம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணப்பெறுதல்கள் மற்றும் பணமாற்றங்கள் தொடர்பான வங்கியின் பதிவுகள் அனைத்து நோக்கங்களுக்கும் இறுதியானதும் கட்டுப்படுத்தக்கூடியதுமான சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மேலும், வாடிக்கையாளரின் அறிவோ, அனுமதியோ அல்லது சம்மதமோ இருந்தாலோ இல்லாவிடினும், அத்தகைய பணப்பெறுதல்கள் மற்றும் பணமாற்றங்கள் தொடர்பான தொகையை வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பற்றுப் பதிவு செய்ய வங்கிக்கு வாடிக்கையாளர் அதிகாரம் வழங்குகிறார்.

IX. ATM திரையில் காண்பிக்கப்படும் தொகையோ அல்லது ATM மூலம் அச்சிடப்படும் இருப்பு விசாரணைச் சீட்டு (Inquiry Slip) அல்லது பரிவர்த்தனைப் பற்றுச்சீட்டு (Receipt Advice) ஆகியவற்றில் குறிப்பிடப்படும் தொகையோ, எந்தவொரு நோக்கத்திற்காகவும், வாடிக்கையாளரின் கணக்கின் உண்மையான இருப்பு நிலையை உறுதிப்படுத்தும் இறுதியான ஆதாரமாகக் கருதப்படமாட்டாது என்பதை வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார்.

X. அட்டை(Card) அல்லது தானியங்கி பணவழங்கும் இயந்திரம் (ATM) செயலிழப்பது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவது அல்லது ATM இல் போதுமான பணம் இல்லாமை உள்ளிட்ட எந்தவொரு காரணத்தாலும் அல்லது அதனால் ஏற்படும் இழப்பு, சேதம், சிரமம் அல்லது விளைவுகள் தொடர்பாக, வங்கியை எவ்விதத்திலும் பொறுப்புக்கூறச் செய்யவோ, பொறுப்பாளியாகக் கருதவோ அல்லது கணக்குக் கேட்கவோ வாடிக்கையாளருக்கு உரிமையில்லை.

XI. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உட்பிரிவு (x) இன் பொதுவான வரம்பைக் குறைக்காமல், அதற்கு உட்பட்டு, வாடிக்கையாளர் அட்டையை தனது சொந்தப் பொறுப்பிலும் துணிந்தும் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறார். அட்டையின் பயன்பாட்டுடன் தொடர்புடையதாகவோ அல்லது அதிலிருந்து எழுகின்றதாகவோ இருக்கும் அனைத்து ஆபத்துக்களையும் முழுமையாக வாடிக்கையாளரே ஏற்றுக்கொள்வார்.

XII. எந்தவொரு காரணத்தினாலும் அட்டையின் (Card) மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாத சந்தர்ப்பங்களில், அதற்காக வங்கி எவ்விதப் பொறுப்பும் ஏற்காது என்பதை வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார்.

XIII. அட்டை(Card) இனி தேவையில்லாத சந்தர்ப்பங்களிலோ அல்லது வங்கியிலுள்ள வாடிக்கையாளரின் கணக்கு ஏதேனும் காரணத்தால் மூடப்படும் சந்தர்ப்பங்களிலோ, அட்டையை இரத்து செய்வதற்காக வங்கியிடம் மீள ஒப்படைக்க வேண்டும்.

XIV. அட்டையை(Card) இரத்துச் செய்வதன் மூலமாகவோ அல்லது அதன் புதுப்பித்தலை (Renewal) மறுப்பதன் மூலமாகவோ, வாடிக்கையாளருக்கு முன்கூட்டிய அறிவிப்பு வழங்காமல், எந்த நேரத்திலும் ATM வங்கிச் சேவையை நிறுத்துவதற்கு வங்கிக்கு முழு உரிமை இருப்பதை வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார்.

XV. இலங்கை ரூபாயைத் தவிர்ந்த வேறு நாணயத்திலும் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு அட்டைப் பரிவர்த்தனையும் (Card Transaction), மாற்று நாளில் (Date of Conversion) Visa International நடைமுறைப்படுத்தும் நாணய மாற்று விகிதத்தின் (Exchange rate) அடிப்படையில் இலங்கை ரூபாயாக மாற்றப்பட்ட பின்னர், அதனுடன் வங்கியால் விதிக்கப்படும் மேலதிக சதவீதக் கட்டணமும் மற்றும் பொருந்துமாயின், Visa International வங்கியிடமிருந்து அறவிடும் பரிவர்த்தனைக் கட்டணமும், அவ்வாறான கட்டணம் வங்கியுடன் பகிர்ந்து கொள்ளப்படக்கூடியதாக இருந்தாலும், வாடிக்கையாளரின் கணக்கில் பற்றுப்பதிவு செய்யப்படும் என்பதை வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார்.

XVI. இவ்அட்டையை(Card) பயன்படுத்தி, வெளிநாடுகளில் அமைந்துள்ள நிலையான சொத்துக்கள் (Real Estate) அல்லது நிதிசார் சொத்துக்கள் (Financial Assets) கொள்வனவு செய்வதற்கான கட்டணங்களைச் செலுத்தக்கூடாது.

7. ஏனைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

1. வங்கி சேவைகளுக்கான செலவுகள்

(அ) வட்டி மற்றும் கட்டணங்கள்

வாடிக்கையாளர் வங்கிக்கு செலுத்தப்பட வேண்டிய தொகைகளின் மீது விதிக்கப்படும் வட்டியையும், வங்கி வழங்கும் சேவைகளுக்குரிய சேவைக் கட்டணங்களையும், அவ்வப்போது வங்கியுடன் எழுத்துமூலமாக மேற்கொள்ளப்படும் உடன்பாட்டின்படி நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் மற்றும் உரிய காலத்தில் செலுத்தப்பட வேண்டும். அத்தகைய எழுத்துமூல உடன்பாடு இல்லாத பட்சத்தில், வங்கியால் நிர்ணயிக்கப்படும் விகிதம், அடிப்படை மற்றும் காலத்தின்படி அவற்றை செலுத்துவதற்கு வாடிக்கையாளர் பொறுப்பாவார்.

(ஆ) வட்டி மற்றும் சேவைக் கட்டணங்களில் மாற்றங்கள்

மாறுப்படும் வட்டி விகிதம் (Variable Interest rate) பொருந்தும் வசதிகளின், தொடர்புப்பட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படும். வேறுவிதமாக எழுத்துமூலமாக ஒப்புக்கொள்ளப்படாத வரையில், வங்கி தனது நியாயமான தீர்மானத்தின் அடிப்படையில், சேவைகளுக்கான கட்டணங்களை அவ்வப்போது மாற்றுவதற்கு உரிமையுடையதாகும்.

(இ) செலவுகள் மற்றும் பிறச் செலவினங்கள்

வாடிக்கையாளர், வங்கியின் கோரிக்கையின் பேரில், உடனடியாக வங்கிக்கு பின்வரும் அனைத்து தொகைகளையும் செலுத்தவோ அல்லது வங்கிக்கு ஈடுசெய்யவோ வேண்டும். வங்கி வழமையாக அறவிடும் அனைத்து தரகுக்கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள், அவை முன்கூட்டியே வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலோ இல்லாவிட்டாலோ; இப்பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏதேனும் சிறப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அல்லது வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான ஏனைய ஒப்பந்தங்களின் கீழ் வங்கியால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து செலவுகள், கட்டணங்கள், நேரடி செலவுகள் மற்றும் பிற செலவீனங்கள்; மற்றும் சட்ட செலவுகள் உட்பட, மேற்கூறிய அனைத்து செலவுகளும். மேலும் மேற்குறிப்பிடப்பட்ட தொகைகள் அனைத்தையும் வாடிக்கையாளரின் எந்தவொரு கணக்கிலிருந்தும் பற்றுப்பதிவு செய்வதற்கு வங்கிக்கு உரிமையுள்ளது.

(ஈ) வரிகள் மற்றும் ஏனைய அரசாங்க அறவீடுகள்

வங்கியால் வாடிக்கையாளருடன் அல்லது வாடிக்கையாளரின் சார்பில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பாக, பொருந்துமாயின், செலுத்தப்பட வேண்டிய விற்றுமுதல் வரி (Turnover Tax), தேசிய பாதுகாப்பு வரி (National Security Levy), பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (Goods and Services Tax) அல்லது விற்றுமுதல் அடிப்படையில் விதிக்கப்படும் அதற்கு ஒத்த ஏதேனும் வரி, முத்திரைக் கட்டணம் (Stamp Duty) அல்லது ஏனைய சட்டப்பூர்வமான வரிகள், கட்டணங்கள் மற்றும் அறவீடுகள் (Levies) ஆகிய அனைத்துத் தொகைகளையும் வங்கிக்கு முழுமையாக ஈடுசெய்வதற்கு வாடிக்கையாளர் பொறுப்புடையவராவார்.

8. டிஜிட்டல் வாலட் (Digital Wallet) வசதிக்கான கணக்குத் திறப்பிற்கு பொருந்தும் விதிமுறைகள்

1. உள்ளுர்(Local) மொபைல் தொலைப்பேசி இலக்கத்தை கொண்ட வாடிக்கையாளர்கள் மட்டுமே, டிஜிட்டல் வாலட் வசதிக்கான கணக்கைத் திறப்பதற்கு விண்ணப்பிக்கவோ அல்லது அத்தகைய கணக்கைத் திறக்கவோ தகுதியுடையவர்களாவர்.

2. கணக்கைத் திறப்பதற்கான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும், வாடிக்கையாளருக்கு ஒரு தனித்துவமான குறிப்பு இலக்கம் (Unique Reference Number) அல்வது மொபைல் தொலைபேசி (Mobile Number) இலக்கம் வழங்கப்படும்.

3. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு வாலட் கணக்கு மட்டுமே திறந்து பராமரிக்க அனுமதிக்கப்படும்.

4. கணக்கைத் திறந்து, அதனை வாலட்டுடன் (இனி SOLO எனக் குறிப்பிடப்படும்) இணைப்பதற்கு வங்கிக்கு வாடிக்கையாளர் தனது வெளிப்படையான சம்மதத்தையும் அதிகாரத்தையும் வழங்குகிறார்.

5. வாடிக்கையாளர் உடல்ரீதியான முன்னிலையின்றி (Without Physical Presence) டிஜிட்டல் KYC (Digital Know Your Customer) சரிப்பார்ப்பு நடைமுறையின் கீழ், ஒரே நபர் தனது பெயரில் பல்வேறு குறிப்பு இலக்கங்கள் அல்லது மொபைல் தொலைபேசி இலக்கங்கள் பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைத் திறக்க அனுமதிக்கப்படமாட்டார்.

6. வாடிக்கையாளர் வாய்மொழி மூலமாக வழங்கும் KYC (Know Your Customer) தகவல்கள், வாடிக்கையாளரை கட்டுப்படுத்தும் வகையில் செல்லுப்படியாகும். அத்தகவல்கள் SOLO செயலியின் ஊடாக வாடிக்கையாளர் நேரடியாக சமர்ப்பிக்கும் தகவல்களுக்கு இணையான சட்டப்பூர்வ செல்லுப்படியாக்கத்தையும் நம்பகத்தன்மையையும் கொண்டதாகக் கருதப்படும்.

7. SOLO- வுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள மொபைல் தொலைபேசி இலக்கத்தின் அடையாளத் தகவல்களை சரிப்பார்ப்பதற்கு வாடிக்கையாளர் வங்கிக்கு தனது வெளிப்படையான சம்மதத்தை வழங்குகிறார்.

8. வாடிக்கையாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களை வங்கியால் திருப்திகரமாக சரிப்பார்க்க முடியாத பட்சத்தில், அவற்றை ஏற்க மறுப்பதற்கான முழுமையான மற்றும் பிரத்தியேகமான உரிமை வங்கிக்கு உள்ளது.

9. அடையாள சரிப்பார்ப்பு நடவடிக்கையின் போது, தொடர்பு மைய பணியாளர்களால் கேட்கப்படும் சரிப்பார்ப்பு வினாக்களுக்கு வாடிக்கையாளர் வழங்கும் வாய்மொழிப் பதில்கள் ஒலிப்பதிவு செய்யப்படும். அவ்வொலிப்பதிவுகளை வங்கியின் பதிவுகளில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு, பின்னர் தேவையான சந்தர்ப்பங்களில் செல்லுப்படியாகும் சான்றாக பயன்படுத்துவதற்காக வங்கியின் பாதுகாப்பில் வைத்திருக்கும் உரிமை வங்கிக்கு உள்ளது.

10. கணக்கைத் திறப்பதற்குத் தேவையான தொடர்புடைய அனுமதி மற்றும் சரிப்பார்ப்புகளைப் பெறும் நோக்கில், CRIB (Credit Information Bureau) அறிக்கையைப் பெறுவதற்கு வங்கிக்கு வாடிக்கையாளர் தனது வெளிப்படையான மற்றும் நிபந்தனையற்ற சம்மதத்தை வழங்குகிறார்.

11. ஒரு தனிநபரின் உடல்ரீதியான KYC (Know Your Customer) சரிப்பார்ப்பை மேற்கொள்ள முடியாத பட்சத்தில், அந்தக் கணக்கின் செயற்பாடுகளை இடைநிறுத்த வங்கிக்கு முழுமையான மற்றும் பிரத்தியேகமான உரிமையுள்ளது.

12. SOLO மூலம் டிஜிட்டல் KYC விபரங்களை சமர்ப்பித்த தனிநபரின் உடல்ரீதியான அடையாள சரிப்பார்ப்பு (Physical Verification) வங்கியால் நிறைவு செய்யப்படும் வரை அந்த கணக்கில் பண வைப்பு மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது.

13. தனிநபரின் உடல்ரீதியான சரிப்பார்ப்பை நிறைவு செய்யும் வரை, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மற்றும் ஒரு நாளுக்கான மொத்த பரிவர்த்தனை வரம்பிற்கும் வங்கி வரம்புகளை நிர்ணயிக்கும். நிர்ணயிக்கப்பட்ட அந்த வரம்புகளை மீறும் எந்தவொரு பரிவர்த்தனையும் செயலாக்கப்படமாட்டாது.

14. கணக்கில் நிதி வரவு வைக்கப்பட்ட பின்னர், வங்கியின் தீர்மானத்தின் அடிப்படையில், வாடிக்கையாளருக்கு இணைய வங்கிச் சேவை (Internet Banking), மொபைல் வங்கிச் சேவை (Mobile Banking) மற்றும் எச்சரிக்கைச் சேவை (Finacle Alerts Service) ஆகிய வசதிகள் வழங்கப்படலாம்.

15. SOLO செயலியின் ஊடாக வாடிக்கையாளர் விடுக்கும் கோரிக்கையின் அடிப்படையில், வங்கியின் நடைமுறைகள் மற்றும் அனுமதிகளுக்கும் உட்பட்டு, வாடிக்கையாளருக்க தனியான பற்று அட்டை (Debit card) வழங்கபடலாம்.

II. மரணம், செயல்திறனின்மை அல்லது வங்குரோத்து நிலை

வாடிக்கையாளரின் செயல்திறனின்மை (Incapacity) அல்லது வங்குரோத்து நிலை (Bankruptcy) ஏற்பட்டால், வங்கி தனது திருப்திக்குரிய வடிவிலும் உள்ளடக்கத்திலும், அதற்கான ஆவண ஆதாரங்களை (Documentary Evidence) (உதாரணமாக: நிர்வாக ஆவணங்கள் (Letter of Administration) தொடர்புடைய நீதிமன்ற உத்தரவுகள் அல்லது அதற்கு சமமான ஆவணங்கள்) வாடிக்கையாளர் அல்லது மறைந்தவரின் நிர்வாகி, நிறைவேற்றுநர், பிற தனிப்பட்ட பிரதிநிதி, நம்பிக்கையாளர், சொத்து பொறுப்பாளர் அல்லது சொத்துக்களின் எந்தவொரு உரிமைக் கோருபவரும்) ஆகியோருக்கு சொத்துக்களை விடுப்பதற்கு முன், வங்கி தனது திருப்திக்குரிய வகையில் அவற்றை ஏற்றுக்கொள்ளும் உரிமைக் கொண்டுள்ளது. வங்கியின் கோரிக்கையின் பேரில், அத்தகைய ஆவணங்களின் அசல் பிரதிகள் மற்றும் தேவையான பட்சத்தில் வங்கிக்கு ஏற்றதாக இருக்கும் ஆங்கில மொழிப்பெயர்ப்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும். எந்தவொரு கூட்டு கணக்கு வைத்திருப்பவரின் மரணம், செயல்திறனின்மை அல்லது வங்குரோத்து நிலை தொடர்பாக, வங்கி அதற்கான நம்பகமான ஆதாரமாகக் கருதும் மூலத்திலிருந்து எழுத்துமூல அறிவிப்பு பெறும்வரை, அந்த தகவல் வங்கியைக் கட்டுப்படுத்தாது. அத்தகைய அறிவிப்பு கிடைத்தவுடன், மேற்கூறிய ஆதாரங்கள் வங்கியின் திருப்திக்குரிய வகையில் கிடைக்கும் வரை, சம்பந்தப்பட்ட கணக்கை முடக்குவதற்கு (Freeze) வங்கிக்கு முழுமையான மற்றும் பிரத்தியேகமான உரிமையுள்ளது.

III. வெளிநாட்டு நாணய இடர் வெளிப்படுத்தல்

வாடிக்கையாளர், வெளிநாட்டு நாணய முதலீடுகளுடன் தொடர்படைய இழப்புகள் மற்றும் அதனுடன் இணைந்த நிதி மற்றும் பிற ஆபத்துக்கள் குறித்து முழுமையாக அறிந்திருப்பதாகவும், அவற்றை ஏற்க தயாராகவும் திறனுள்ளதாகவும் இத்தால் அறிவிக்கிறார். மேலும், அத்தகைய முதலீடுகளால் ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்புக்கும் வங்கியை எவ்விதத்திலும் பொறுப்பாக்க மாட்டேன் எனவும் வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார்.

IV. வங்கியின் இரகசியத்தன்மை

பொது சட்டத்தின் கீழ், வாடிக்கையாளருடன் தொடர்புடைய தகவல்களை இரகசியமாக வைத்திருப்பது வங்கியின் கடமையாகும். 1988ஆம் ஆண்டு வங்கி சட்ட எண் 30 இன் பிரிவு 77ன் கீழ், வங்கியின் அதிகாரிகளுக்கும் அதேபோன்ற இரகசியக் கடமை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், வங்கி தனது கடமைகளை நிறைவேற்றும் நோக்கில் அல்லது ஏதேனும் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், வாடிக்கையாளருக்கு தொடர்புடைய தகவல்களை வெளிப்படுத்துவதற்கு உரிமைக் கொண்டுள்ளது.

V. தகவல் வெளிப்படுத்தல் 

வாடிக்கையாளர், தன்னுடன் அல்லது தனது பரிவர்த்தனைகள் அல்லது கணக்குகளுடன் தொடர்புடைய எந்தவொரு தகவலையும் வங்கி பின்வரும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு வெளிப்படுத்துவதற்கு இத்தால் அனுமதி அளிக்கிறார்.

i. வாடிக்கையாளருக்கு வங்கி வழங்கும் எந்தவொரு வங்கி வசதி அல்லது சேவையுடன் தொடர்பாக, வாடிக்கையாளரின் அல்லது அவரது கணக்குகளின் பாதுகாப்பு வழங்குநராக அல்லது உத்தரவாத வழங்குநராக இருக்கும் எந்தவொரு நபர் அல்லது மூன்றாம் தரப்பினருக்கும்;

ii. வங்கியின் வாடிக்கையாளருடன் தொடர்புடைய எந்தவொரு உரிமைகள் அல்லது பொறுப்புகள் தொடர்பாக, தற்போதைய அல்லது எதிர்கால ஒப்படைப்பு பெறுபவர், பங்கேற்பாளர் அல்லது ஒப்பந்த கட்சியாளர் ஆகியோருக்கும்;

VI. பொறுப்புக்கூறுல் தொடர்பான அடிப்படைக் கொள்கை

வங்கி தனது ஒப்பந்தப் பொறுப்புகளை நிறைவேற்றும் போது, அதன் பணிப்பாளர்களின் வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறான செயல் அல்லது மிகக் கடுமையான அலட்சியம் காரணமாக மட்டுமே வங்கிப் பொறுப்பேற்கும். வாடிக்கையாளரின் சொந்த தவறு அல்லது இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் கடமைகளை மீறியதன் காரணமாக இழப்பு ஏற்பட்டிருந்தால் அல்லது அதற்கு வாடிக்கையாளர் காரணமாக இருந்தால், பங்களிப்பு அலட்சியக் கொள்கை (Principle of Contributory Negligence) அடிப்படையில், அந்த இழப்பை வங்கியும் வாடிக்கையாளரும் தத்தமது பொறுப்பின் அளவிற்கு ஏற்ப ஏற்றுக்கொள்ள வேண்டிய அளவு தீர்மானிக்கப்படும்.

VII. இழப்பீடு

வாடிக்கையாளருக்கு கடன் அல்லது ஏனைய வங்கி சேவைகள் அல்லது வங்கி வசதிகளை வழங்குதல் அல்லது வாடிக்கையாளருக்காக ஏதேனும் வங்கிச் சேவையை நிறைவேற்றுதல் காரணமாக அல்லது அதனுடன் தொடர்புடைய வகையில், வங்கிக்கு ஏற்படக்கூடிய அல்லது வங்கி ஏற்க வேண்டிய அனைத்து கோரிக்கைகள், வேண்டுகோள்கள், வழக்குகள், இழப்பீடுகள், பொறுப்புக்கள், செலவுகள், இழப்புகள், செலவீனங்கள் மற்றும் பிற தொகைகள் அனைத்திலிருந்தும் வங்கியை வாடிக்கையாளர் பாதுகாத்து, அதற்கான முழுமையான இழப்பீட்டை வழங்க ஒப்புக்கொள்கிறார். மேலும், மேற்குறிப்பிட்ட காரணங்களால் வங்கி ஏதேனும் தொகையைச் செலுத்தியிருந்தாலோ அல்லது செலவீனங்களை மேற்கொண்டிருந்தாலோ, வங்கியின் கோரிக்கையின் பேரில், அவற்றை உடனடியாக வங்கிக்கு திருப்பி செலுத்த வாடிக்கையாளர் கடமைப்பட்டிருப்பார்.

மேலும் வாடிக்கையாளர் அல்லது அவரது பிரதிநிதியின் சட்டரீதியான தகுதி அல்லது அதிகாரம் தொடர்பான ஏதேனும் கட்டுப்பாடுகள் குறித்து, வங்கியின் வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறான செயல் ஏதுமின்றி, வங்கிக்கு தெரியாமல் இருந்ததன் விளைவாக வங்கிக்கு ஏற்படும் எந்தவொரு இழப்பிற்கும், வாடிக்கையாளர் வங்கிக்கு முழுமையான இழப்பீட்டை வழங்க ஒப்பக்கொள்கிறார்.

VIII. தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் 

கலவரம், போர், இயற்கை அனர்த்தம், வங்கியின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஏதேனும் சூழ்நிலைகள் அல்லது வங்கி பொறுப்பேற்க வேண்டியதல்லாத பிற நிகழ்வுகள், அவற்றில் மட்டுப்படாமல், வேலைநிறுத்தம், கதவடைப்பு, போக்குவரத்து தடைகள், உள்நாட்டு கலவரம், உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அரசாங்கம் அல்லது பிற அதிகார அமைப்புகளின் நடவடிக்கைகள் ( சட்டப்பூர்வமானவையோ அல்லது நடைமுறையில் செயல்படுபவையோ) ஏதேனும் சட்டம் அல்லது ஒழுங்குமுறையின் தேவைகள், சந்தை சீர்குலைவு அல்லது ஏதேனும் தீர்வு செய்யும் நிறுவனம் அல்லது மத்திய வைப்பகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆகியவற்றால் அல்லது அவற்றுடன் தொடர்புடைய வகையில் ஏற்படும் இழப்புகள் அல்லது வங்கி தனது கடமைகளை நிறைவேற்ற இயலாமை ஆகியவற்றிற்கு வங்கி எவ்விதத்திலும் பொறுப்பாகாது.

IX. தகவல்கள் மற்றும் அறிவித்தல்கள்

(அ)
வாடிக்கையாளரின் பெயர், முகவரி அல்லது ஏனைய விபரங்களில் ஏற்படும் எந்தவொரு மாற்றத்தையும், மேலும், வங்கியிடம் வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவ அதிகாரங்களில் குறிப்பாக அதிகாரப் பத்திரத்தில் ஏற்படும் இரத்து, திருத்தம் அல்லது மாற்றம் உள்ளிட்ட அனைத்து மாற்றங்களையும், வாடிக்கையாளர் தாமதமின்றி எழுத்துமூலமாக வங்கிக்கு அறிவிக்க வேண்டும். அக்கடமை பொது பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள வாடிக்கையாளரின் விபரங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கும், அப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதித்துவ அதிகாரங்களில் ஏற்படும் இரத்து அல்லது திருத்தங்களுக்கு சமமாகப் பொருந்தும்.

(ஆ)
வாடிக்கையாளரின் தொழில், வணிகம் அல்லது வாழ்வாதாரத் தொழில், நிதி நிலைமை மற்றும் அவற்றில் ஏற்படும் எந்தவொரு முக்கியமான மாற்றம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வாடிக்கையாளர் வங்கிக்கு வழங்க வேண்டும்.

(இ)
வாடிக்கையாளரின் நிதி நிலைமை அல்லது நிதி திறனை பாதிக்ககூடிய அல்லது பாதிக்கும் வாய்ப்புள்ள எந்தவொரு நிலுவையிலுள்ள வழக்குகள் அல்லது எதிர்பார்க்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பான முழுமையான விபரங்களையும் வாடிக்கையாளர் வங்கிக்கு வெளிப்படுத்த வேண்டும்.

(ஈ)
வங்கி, தனது முழுமையான மற்றும் பிரத்தியேகமான தீர்மானத்தின் அடிப்படையில், எவ்வித பொறுப்புமின்றி அறிவித்தல்கள், கடிதங்கள், ஆவணங்கள் அல்லது பிற தொடர்பாடல்களை வங்கியின் பதிவுகளில் காணப்படும் வாடிக்கையாளரின் இறுதியாக அறியப்பட்ட முகவரி, டெலெக்ஸ் இலக்கம், தொலைநகல் இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு சாதாரண அஞ்சல், நேரடி கையளிப்பு, டெலெக்ஸ், தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்புவதற்கு உரிமைக் கொண்டுள்ளது. அத்தகைய தொடர்பாடல்கள் உள்நாட்டில் அனுப்பப்பட்டிருந்தால், அஞ்சலிடப்பட்ட இரண்டு (2) நாட்களின் பின்னர்; வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தால், அஞ்சலிடப்பட்ட ஐந்து நாட்களின் பின்னர்; டெலெக்ஸ், தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டிருந்தால், அதே நேரத்தில்; மற்றும் நேரடியாக கையளிக்கப்பட்டிருந்தால், கையளிக்கப்பட்ட நேரத்தில்; வாடிக்கையாளரால் பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும்.

9. முடிவுறுத்தல்

I. வாடிக்கையாளரின் முடிவுறுத்தும் உரிமை 

வங்கியும் வாடிக்கையாளரும், முடிவுறுத்தல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து எழுத்து மூலமாக வேறுவிதமாக ஒப்புக்கொண்டிருக்காவிட்டால், வாடிக்கையாளர் நியாயமான முன்கூட்டிய எழுத்துமூல அறிவிப்பை வழங்குவதன் மூலம், முழுமையான வணிக உறவையோ அல்லது முறையாகக் கையொப்பமிடப்பட்டு வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகார ஆணையின் அடிப்படையில் உருவான குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வணிக உறவையோ எந்நேரத்திலும் முடிவுறுத்தலாம். இருப்பினும், அத்தகைய முடிவுறுத்தல், முடிவுறுத்தல் நடைமுறைக்கு வரும் முன் வங்கிக்கு ஏற்கனவே உருவாகியுள்ள அல்லது கிடைத்துள்ள எந்தவொரு உரிமைகளையும் எந்தவிதத்திலும் பாதிக்காது.

II. வங்கியின் முடிவுறுத்தும் உரிமை

(அ) அறிவிப்பின் மூலம் முடிவுறுத்தல்
எழுத்துமூலமாக குறிப்பிட்ட காலவரையறையோ அல்லது முடிவுறுத்தல் தொடர்பான ஏற்பாடோ செய்யப்படாத, முறையாக கையொப்பமிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகார ஆணையின் அடிப்படையில் உருவான முழு வணிக உறவையோ, வங்கியின் கருத்துப்படி, நியாயமானதாகக் கருதப்படும் முன்கூட்டிய அறிவிப்பை வழங்கி, எந்நேரத்திலும் வங்கி முடிவுறுத்தலாம். அறிவிப்புக் காலத்தை நிர்ணயிக்கும் போது, நடைமுறையில் சாத்தியமான எல்லா சந்தர்ப்பங்களிலும், வாடிக்கையாளரின் நியாயமான மற்றும் சட்டப்பூர்வமான நலன்களை வங்கி கருத்தில் கொள்ளும்.
(ஆ) நியாயமான காரணத்தின் அடிப்படையில் முன் அறிவிப்பின்றி முடிவுறுத்தல்
வாடிக்கையாளரின் நியாயமான மற்றும் சட்டப்பூர்வமான நலன்களை முறையாகக் கருத்தில் கொண்ட பின்னரும், வணிக உறவைத் தொடர்வது வங்கியால் ஏற்றுக்கொள்ள முடியாததாக நியாயமான காரணங்களின் அடிப்படையில் கருதப்பட்டால், முறையாக கையொப்பமிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகார ஆணையின் அடிப்படையில் உருவான முழு வணிக உறவையோ அல்லது குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வணிக உறவையோ, முன் அறிவிப்பின்றி முடிவுறுத்துவதற்கு வங்கிக்கு உரிமையுள்ளது.
(இ) உரிமைகள் பாதுகாக்கப்படுதல்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு விதியின் அடிப்படையில், வங்கி முழு வணிக உறவையோ அல்லது குறிப்பிட்ட வணிக உறவையோ முடிவுறுத்தினாலும், அத்தகைய முடிவுறுத்தல் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் வங்கிக்கு ஏற்கனவே உருவாகியுள்ள அல்லது சேர்ந்து கிடைத்துள்ள உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படமாட்டாது.

10. உரிமைகள் மாற்றீடு

இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் வங்கிக்கு உள்ள எந்தவொரு அல்லது அனைத்து உரிமைகளையும், வாடிக்கையாளரின் முன்கூட்டிய ஒப்புதலைப் பெறாமல், வேறு எந்தவொரு தரப்பிற்கும் மாற்றுவதற்கு வங்கிக்கு முழுமையான உரிமையுள்ளது.

11. விதிமுறைகளின் செல்லுபடியாகாமை

இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் உள்ள ஏதேனும் ஒரு விதிமுறை, எந்நேரத்திலும் சட்டவிரோதமானதாகவோ, செல்லுப்படியாகாததாகவோ அல்லது அமுல்ப்படுத்த இயலாததாகவோ மாறினாலும், அத்தகைய சட்டவிரோதம், செல்லுப்படியாகாமை அல்லது அமுல்படுத்த இயலாமை, ஏனைய விதிமுறைகளின் செல்லுப்படியாக்கத்தையோ அல்லது அமலாக்கத்தையோ எவ்விதத்திலும் பாதிக்காது.

12. உரிமைத் துறப்பு

குறிப்பிட்ட ஏதேனும் ஒரு நிகழ்வு அல்லது சந்தர்ப்பத்தில், இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒரு விதியை நடைமுறைப்படுத்துவதில் வங்கி தாமதித்தாலோ, தவிர்த்தாலோ அல்லது அதனை அமல்படுத்தாமல் இருந்தாலோ, அது எதிர்காலத்தில் அத்தகைய விதிமுறைகளை முழுமையாகவும் கண்டிப்பாகவும் அமல்படுத்துவதற்கான வங்கியின் உரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது. வங்கியால் வழங்கப்படும் எந்தவொரு உரிமைத் துறப்பும் அது எழுத்துமூலமாக வழங்கப்பட்டிருந்தாலன்றி செல்லுப்படியாகக் கருதப்படமாட்டாது.

13. அதிகார வரம்பும் பொருந்தும் சட்டமும்

I. நீதித்துறை அதிகார வரம்பு
வாடிக்கையாளருக்கு எதிராக வேறு எந்த நாட்டிலோ அல்லது வேறு எந்த நீதிமன்றத்திலோ சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கோ அல்லது தொடர்வதற்கோ வங்கிக்கு உள்ள உரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், வாடிக்கையாளர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பிரத்தியேகமற்ற நீதித்துறை அதிகார வரம்பிற்கு மீளப்பெற முடியாத வகையில் உட்படுவதாக ஒப்புக்கொள்கிறார். இருப்பினும், வங்கி தொடர்பான வழக்குகள் இலங்கை நீதிமன்றங்களிலேயே விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
II. பொருந்தும் சட்டம்
இவ்விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் உருவாகும் வணிக உறவுகள், வாடிக்கையாளர் கணக்குகள், பரிவர்த்தனைகள், நடவடிக்கைகள் மற்றும் அதிகார ஆணை ஆகிய அனைத்தும் இலங்கை சட்டங்களின்படி நிர்வகிக்கப்பட்டு, அவற்றிற்கமைய விளக்கப்பட வேண்டும். இப்பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில்: ஒருமையைக் குறிக்கும் சொற்கள் பன்மையையும், பன்மையை குறிக்கும் சொற்கள் ஒருமையையும் உள்ளடக்கியதாகக் கருதப்படும்; ஆண்பாலைக் குறிக்கும் சொற்கள் பெண்பாலையும், பிற பாலினங்களையும் உள்ளடக்கியதாகக் கருதப்படும்; நபர் என்பதைக் குறிக்கும் சொற்கள், நிறுவனங்கள், கம்பனிகள் மற்றும் பிற சட்டரீதியான அமைப்புகளையும் உள்ளடக்கியதாகக் கருதப்படும்; தலைப்புகள் வசதிக்காக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன, அவை இவ்வாவணத்தில் பொருள் விளக்கம் அல்லது சட்ட விளக்கத்தை எவ்விதத்திலும் பாதிக்காது; ஏதேனும் சட்டம், சட்டவிதிமுறை, ஒழுங்குமுறை, விதிமுறை, உத்தரவு அல்லது பணிப்புரை ஆகியவற்றிற்கான குறிப்புகள், அவை காலத்திற்கு காலம் மீளச் சட்டமாக்கப்பட்டாலும், திருத்தப்பட்டாலும், விரிவுப்படுத்தப்பட்டாலும், மேலதிகமாக இணைக்கப்பட்டாலும் அல்லது மாற்றீடு செய்யப்பட்டாலும், அவற்றையும் உள்ளடக்கியதாகவே பொருள் கொள்ளப்படும்.

வங்கியால் வழங்கப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறுவது மற்றும்/அல்லது பயன்படுத்துவது தொடர்பாக தனிப்பட்ட தரவுகளை வழங்குவதன் மூலம், வாடிக்கையாளர் பின்வருவனவற்றை இதன்மூலம் ஒப்புக்கொள்கிறார்:

i) வழங்கப்பட்ட அனைத்து தனிப்பட்ட தரவுகளும் உண்மையானவை, துல்லியமானவை மற்றும் முழுமையானவை, மேலும் அவற்றை வழங்குவதற்கு வாடிக்கையாளருக்குத் தேவையான அனுமதி மற்றும்/அல்லது அதிகாரம் உள்ளது.

ii) வங்கியின் தனியுரிமை அறிவிப்பில் உள்ள விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் வாடிக்கையாளர் ஏற்றுக்கொள்கிறார். https://www.hnb.lk/privacy-notice மற்றும் மேற்கூறிய தனியுரிமை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட அடிப்படையின்படி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் செயலாக்கப்படும். இதில், சேகரித்தல், சேமித்தல், மாற்றுதல், மீட்டெடுத்தல், பயன்படுத்துதல், பகிர்தல் மற்றும் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தரவு செயலாக்க நடவடிக்கைகள் அடங்கலாம். தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்ட அசல் நோக்கத்திற்கு வெளியே செய்யப்படும் எந்தவொரு செயலாக்கமும், வாடிக்கையாளருக்கு முன் அறிவிப்பு மற்றும்/அல்லது அவரது ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படும்.

வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவுகளுக்கான செயலாக்க நடவடிக்கைகளில் பின்வருவன அடங்கும், ஆனால் இவை மட்டுமே அல்ல:

  1. நிதிச் சேவைகளை வழங்குதல்
  2. பிற சேவைகளை வழங்குதல்
  3. சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்குதல்
  4. சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு
  5. எங்கள் சேவைகளை மேம்படுத்துதல்
  6. வாடிக்கையாளர் ஆதரவு
  7. தானியங்கி முடிவெடுத்தல்
  8. உங்களையும் எங்கள் மக்களையும் பாதுகாப்பாக வைத்திருத்தல்
  9. பொது நலன்கள்

மேலே பயன்படுத்தப்பட்டுள்ள 'தனிப்பட்ட தரவு' என்ற சொல், 'தனிப்பட்ட தரவு' மற்றும் 'சிறப்பு வகை தனிப்பட்ட தரவு' ஆகிய பதங்களைக் குறிக்கும், மேலும் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்கத்திலான இலங்கை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அச்சொற்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே விளக்கத்தையே கொண்டிருக்கும்.

மேலும் விவரங்களுக்கு, https://www.hnb.lk/privacy-notice என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது எங்கள் தரவுப் பாதுகாப்பு அதிகாரியை dpo@hnb.lk என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

பொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் கூப்பன்கள்.

  • இந்தச் சலுகையானது, SOLO உடன் இணைக்கப்பட்ட மற்றும் Just Pay-இல் பதிவுசெய்யப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கும், அந்தந்தக் கணக்கின் மூலம் SOLO-வில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கும் பிரத்தியேகமாகக் கிடைக்கும்.
  • தள்ளுபடிக்குத் தகுதிபெற, வாடிக்கையாளர்கள் தங்கள் முழு கட்டணத்தையும் SOLO-வைப் பயன்படுத்தி செலுத்த வேண்டும்.
  • இந்தச் சலுகையின் கீழ் வழங்கப்படும் தள்ளுபடிகள் வேறு நிறுவனத்திற்கு மாற்றத்தக்கவை அல்ல, பணமாக மாற்ற முடியாது, மேலும் பங்கேற்கும் சேவை நிறுவனங்களின் வேறு எந்த தற்போதைய சலுகைகள் அல்லது நடவடிக்கைகளுடன் இவற்றை இணைக்க முடியாது.
  • இந்தச் சலுகையின் விதிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தையும் அல்லது ஏதேனும் ஒன்றையும் எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றித் திருத்தவோ, மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ சோலோவிற்கு உரிமை உண்டு.
  • இதில் அடங்கியுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஏதேனும் சர்ச்சை எழுந்தால், சம்பந்தப்பட்ட சேவை நிறுவனம் மற்றும் சோலோவின் முடிவே இறுதியானதாகும்.
  • இந்தச் சலுகையானது, அந்தந்த சேவை நிறுவனம் மற்றும் சோலோவின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
  • இந்த விளம்பரத்தில் ஈடுபட்டுள்ள சேவை நிறுவனங்கள் வழங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்திற்கு சோலோ எந்தப் பொறுப்பையும் ஏற்காது, ஏனெனில் வங்கி அத்தகைய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர் அல்ல.
  • சோலோ கூப்பன்களுக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல், கூப்பன் காலாவதியான பிறகு, கோரிக்கைக்கு முறையான காரணம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும்.
  • சோலோ கூப்பனின் காலாவதி தேதிக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டால், அதற்கான பணத்தைத் திரும்ப அளிக்க இயலாது.

கேஷ்பேக் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • கேஷ்பேக் சலுகையானது, SOLO வழியாக மேற்கொள்ளப்படும் SOLO MAX பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படும்.
  • கேஷ்பேக் சலுகைகளுக்குத் தகுதி பெற, வாடிக்கையாளர் SOLO Max வழியாகப் பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.
  • கேஷ்பேக்குகள் மாற்றத்தக்கவை அல்ல, பணமாக மாற்ற முடியாது, மேலும் பங்கேற்கும் சேவை நிறுவனங்களின் வேறு எந்த தற்போதைய விளம்பரங்கள் அல்லது சலுகைகளுடன் இணைக்க முடியாது.
  • முன் அறிவிப்பின்றி எந்த நேரத்திலும், இந்தச் சலுகையின் விதிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தையும் அல்லது ஏதேனும் ஒன்றையும் திருத்துவதற்கோ, மாற்றுவதற்கோ அல்லது திரும்பப் பெறுவதற்கோ சோலோவிற்கு உரிமை உண்டு.
  • இதில் அடங்கியுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஏதேனும் சர்ச்சை எழுந்தால், சம்பந்தப்பட்ட சேவை நிறுவனம் மற்றும் சோலோவின் முடிவே இறுதியானதாகும்.
  • இந்தச் சலுகையானது, அந்தந்த சேவை நிறுவனம் மற்றும் சோலோவின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
  • இந்த விளம்பரத்தில் ஈடுபட்டுள்ள சேவை நிறுவனத்தால் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்திற்கு சோலோ எந்தப் பொறுப்பையும் ஏற்காது, ஏனெனில் வங்கி அத்தகைய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர் அல்ல.

மறுப்பு

சம்பந்தப்பட்ட பில் செலுத்துபவர் அல்லது பணம் பெறுபவரிடமிருந்து பெறப்பட்ட, இங்கு காட்டப்படும் தகவல்கள், வாடிக்கையாளரின் வசதிக்காகவும், பணம் செலுத்துவதில் ஏற்படும் பிழைகளைக் குறைக்க உதவுவதற்காகவும் மட்டுமே வழங்கப்படுகின்றன. அத்தகைய தகவல்களின் துல்லியம் அல்லது முழுமை குறித்து வங்கி எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும் அல்லது உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை, மேலும் எந்தவொரு தவறுகள் அல்லது விடுபடல்களுக்கும் பொறுப்பேற்காது. காட்டப்படும் தரவுகள் தொடர்பான அனைத்து தகராறுகள், தெளிவுபடுத்தல்கள் அல்லது வினவல்களும் சம்பந்தப்பட்ட பில் செலுத்துபவர் அல்லது பணம் பெறுபவரிடம் நேரடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.