Skip to main content

அமுலுக்குவரும் திகதி: 2025 ஜூன் மாதம் 03 ஆம் தேதி

ஹற்றன் நேஷனல் வங்கி பி.எல்.சி. (“HNB”, “நாம்”, “எமது” அல்லது “எமக்கு”) உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை (கீழே 1(A) மற்றும் 1 (B) இல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள்) பாதுகாப்பதற்கும் உங்கள் தனியுரிமையை உறுதிப்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது. நாம் உங்களைப் பற்றிய எத்தகைய தகவல்களைச் சேகரிக்கின்றோம், எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோம், யாருடன் அவற்றைப் பகிர்ந்துகொள்வோம், எத்தகைய சூழ்நிலையில் அவற்றைப் பகிர்ந்துகொள்வோம், அவை தனிப்பட்டவையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு நாம் எத்தகைய நடவடிக்கைகளை எடுப்போம் என்பன குறித்து இத் தனியுரிமை அறிவிப்பு விளக்கம் அளிக்கின்றது.

1. நாம் சேகரிக்கும் தகவல்கள்

உங்களுக்குச் சிறந்த சேவை வழங்குவதற்காக நாம் பின்வரும் வகையான தனிப்பட்ட தரவுகளை (இனிமேல் ‘தனிப்பட்ட தரவுகள்’ என்று குறிப்பிடப்படும்) சேகரிக்கக்கூடும்:

(A) வாடிக்கையாளர்களுக்கு:

  •  அடையாளத் தகவல்கள் : உங்களைத் தனித்துவமாகவோ அல்லது ஓரளவு தனித்துவமாகவோ அடையாளம் காணும் தகவல்.

    •  உதாரணத்திற்கு: பெயர், பாலினம், பிறந்த திகதி, தேசியம், உங்கள் புகைப்படங்கள், கையொப்பம், EPF/ETF, ஓய்வூதிய எண், முதலியன.
  • உத்தியோகபூர்வ அடையாளத் தகவல்: உத்தியோகபூர்வ/அரசாங்கரீதியில் அடையாளம் காட்டும் தகவல்கள்.
    • உதாரணம்: தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம்,வரி அடையாள இலக்கம், சாரதி அனுமதிப்பத்திர இலக்கம் முதலியன.
  • தொடர்புத் தகவல்கள்: உங்களுக்கு செய்திகளை முகவரியிட,அனுப்ப அல்லது தொடர்பாடல் செய்ய இடமளிக்கும் தகவல்கள்.
    • உதாரணம்: வசிப்பிட முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசிஇலக்கம் (மொபைல் அல்லது நிலையான தொலைபேசி) முதலியன.
  • நிதித் தகவல்கள்: உங்கள் நிதி நிலைமை, பின்னணி, அந்தஸ்து மற்றும் வரலாற்றை அடையாளம் காண்பதற்குத் தேவைப்படும் தகவல்கள்.
    • உதாரணம்: கணக்கு விபரங்கள், கடன் அட்டை விபரங்கள்,கொடுக்கல் வாங்கல வரலாறு, கிறெடிட் ஸ்கோர் முதலியன.
  • தொடர்பாடல் தகவல்கள்: இணையம் அல்லது டிஜிட்டல் தொடர்புகள் மூலம் உங்களைப் பற்றிய சேகரிக்கப்படும் தகவல்கள்.
    • உதாரணம்: நாம் உங்களுடன் மேற்கொள்ளும் தொலைபேசி உரையாடல்கள், தகவல் பரிமாற்றம், மின்னஞ்சல் தொடர்பு மற்றும் வேறு தொடர்பாடல்கள்
  • அமைவிடத் தரவுகள்: ஒரு சாதனத்தின் அமைவிடத்தை தெரிவிக்கும் அல்லது கொண்டுள்ள தகவல்கள்.
    • உதாரணம்: உங்கள் இணைய நெறிமுறைட (IP) முகவரி அல்லது நேர வலய அமைப்புகள் முதலியன
  • தனிப்பட்ட உறவுத் தரவு : உங்கள் அடையாளத்தைத் தீர்மானிக்கக்கூடிய, தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்புகள் அல்லது நெருங்கிய இணைப்புகள் பற்றிய தகவல்.
    உதாரணமாக, நீங்கள் அரசியல் செல்வாக்குள்ள நபராகவோ, பொது அதிகாரியாகவோ இருந்து, அல்லது அத்தகைய நபர்களுடன் நெருங்கிய தனிப்பட்ட அல்லது நிதி ரீதியான உறவுகளைக் கொண்டிருந்தால் 
  • குக்கீகள் மற்றும் கண்காணிப்புத் தரவுகள்: எமது வலைத்தளங்கள், ஒன்லைன்வங்கிச் சேவை மற்றும் மொபைல் பிரயோகங்களில் உங்கள் பயன்பாடுமற்றும் உலாவல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க நாம்குக்கீஸ் மற்றும் அது போன்ற கண்காணிப்புத் தொழில்நுட்பங்களைப்பயன்படுத்துகின்றோம். உங்கள் சாதனங்களிலிருந்த சில தகவல்களைத் தன்னியக்கமாகவே சேகரிக்க நாம் குக்கீஸை பயன்படுத்தக்கூடும். உள்ளகப் பகுப்பாய்வு மற்றும் பிரச்சினை தீர்ப்பு, உங்களை அடையாளம் கண்டு உங்கள் விருப்பத்தேர்வுகளை நினைவில் வைத்திருத்தல், தரத்தை மேம்படுத்துதல் மற்றும் உங்கள் உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குதல், உங்கள் கணக்கின் பாதுகாப்பு நிலையைத் தீர்மானித்தல்போன்றவற்றிற்கு இத் தகவல்கள் உபயோகிக்கப்படலாம். மேலதிகவிபரங்களுக்கு எமது தனியான HNB குக்கீ கொள்கையைப் பார்க்கவும்.

சில சமயங்களில், உங்களைப் பற்றிய விசேட வகையான தனிப்பட்ட தகவல்களையும் நாம் சேகரிக்க வேண்டியிருக்கலாம். ஆனால், அத்தகைய தகவல்கள் தேவைப்பட்டால் உங்கள் ஒப்புதலுடன் அல்லது சட்டம் இடமளிக்கும் பட்சத்தில் மாத்திரம் சேகரிக்கப்படும். அத்தகைய தகவல்களில் பின்வருவன உள்ளடங்கலாம்:

  • இன ரீதியான தகவல்கள் :  உங்கள் இனத்தை அல்லது இனப் பூர்வீகத்தைவெளிப்படுத்தும் தகவல்கள்.
  • பயோமெட்ரிக் தகவல்கள் : உங்கள் கைவிரல் அடையாளங்கள், உங்கள் படங்கள் அல்லது உங்கள் CCTV அல்லது வீடியோ பதிவு போன்ற உடல் அல்லது நடத்தைப் பண்புகள் மூலம் உங்களைத் தனித்துவமாக அடையாளம் காட்டும் தகவல்கள்.

உங்கள் தனிப்பட்ட தரவுகள் நேரடியாக உங்களிடமிருந்து சேகரிக்கப்படும். ஆனால், சில சமயங்களில், உங்களின் தனிப்பட்ட தரவுகளை, தேவைக்கேற்ப, வேறு ஆட்களிடமிருந்தும் நாம் சேகரிக்க வேண்டியிருக்கலாம். அத்தகைய ஆட்களுள் உங்களுக்குத் தெரிந்த நபர்களும் (ஆனால் அவர்கள் மட்டுமல்ல) உள்ளடங்கலாம்:

  • உதாரணம்: பராயமடையாதவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள். நீங்கள் பராயமடையாத ஒருவரெனின், உங்கள் தனிப்பட்ட தரவுகளைச் சேகரிப்பதற்கு, பயன்படுத்துவதற்கு அல்லது பகிர்ந்துகொள்வதற்கு முன்னர் நாம் உங்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சம்மதத்தைப் பெறுவோம்.


    தொழில் மனுதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு:

    மேலுள்ள தகவல்களைத் தவிர, நாம் பின்வருவனவற்றையும் சேகரிக்கக்கூடும்:

    • நடத்தைத் தரவுகள்: உங்கள் நடத்தைப் பண்புகளை விபரிக்கும் பகுப்பாய்வுத் தகவல்கள்.
    உதாரணம்: மனோதத்துவ பரிசோதனை போன்ற தொழில் வாய்ப்புக்கு முந்திய ஏதேனும் சோதனைகளின் முடிவுகள்.

    •தனிப்பட்ட உறவுத் தரவுகள்: உங்களுக்கும் ஏனைய HNB ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்புகள் அல்லது நெருங்கிய உறவுகள் பற்றிய தகவல்கள்.
    உதாரணம்: உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது HNB ஊழியர்களாக இருப்பின்.

    சில சமயங்களில், உங்களைப் பற்றிய விசேட வகையான தனிப்பட்ட தகவல்களையும் நாம் சேகரிக்க வேண்டியிருக்கலாம். ஆனால், அத்தகைய தகவல்கள் தேவைப்பட்டால் உங்கள் ஒப்புதலுடன் அல்லது சட்டம் இடமளிக்கும் பட்சத்தில் மாத்திரம் சேகரிக்கப்படும். அத்தகைய தகவல்களில் பின்வருவன உள்ளடங்கலாம்:

    •உடல்நலத் தகவல்கள்: உங்கள் உடல்நலம் தொடர்பான தகவல்கள்
    •தொழிற்சங்க அங்கத்துவம்: சில நியாயாதிக்கங்களில் ஏற்புடையதாயின்.
    •குற்றவியல் தண்டனைகள், வழக்குகள் அல்லது குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்கள்: எமது நிதியியல் குற்றத் தடுப்புக் கடப்பாடுகள் தொடர்பாக நாம் அடையாளம் காணும் குற்றவியல் தண்டனைகள் அல்லது தொடர்புடைய தகவல்கள். குற்றச்செயல்கள் அல்லது சுமத்தப்படும் குற்றங்கள் அல்லது தண்டனைகள் அவற்றில் அடங்கும்.

    உங்கள் தனிப்பட்ட தரவுகள் நேரடியாக உங்களிடமிருந்து சேகரிக்கப்படும். ஆனால், உங்களின் தனிப்பட்ட தரவுகளை, தேவைக்கேற்ப, வேறு மூலங்களிலிருந்தும் நாம் சேகரிக்க வேண்டியிருக்கலாம். அத்தகைய மூலங்களுள் பின்வருன (ஆனால் அவை மட்டுமல்ல) அடங்கும்:

    •உங்களுக்குத் தெரிந்தவர்கள்:
    உதாரணம்: மனோதத்துவப் பரிசோதனை போன்ற தொழிலுக்கு முன் நடத்தப்படும் ஏதேனும் சோதனைகளின் முடிவுகள்.
    •வியாபார மற்றும் ஏனைய அமைப்புகள்
    உதாரணம்: உங்கள் தொழில் வழங்குநர் மற்றுமÆஅல்லது நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது உங்கள் கடன் குறிப்புடன் தொடர்புடைய கம்பனி, வியாபாரம அல்லது அமைப்பு மற்றும் மோசடி தடுப்பு நிலையங்கள், சட்ட அமுலாக்க அதிகார அமைப்புகள், LinkedIn, Facebook, Instagram போன்ற சமூக வலையமைப்புத் தளங்கள் முதலியன.

    •பகிரங்கமாகக் கிடைக்கும் மூலங்கள்:
    உதாரணம்: ஒன்லைன் விபரக்கொத்துகள், தொழில் தளங்கள், வெளியீடுகள், சமூக ஊடக இடுகைகள் மற்றும் பகிரங்கமாகக் கிடைக்கும் ஏனைய தகவல்கள்.

2. நாம் ஏன் உங்கள் தகவல்களைச் சேகரிக்கின்றோம்?

நாம் எமது சேவைகளை நிர்வகிக்கவும் எமது வியாபாரத்தைக் கொண்டுநடத்தவுமே உங்களுடைய தனிப்பட்ட தரவுகளைச் சேகரிக்கின்றோம். ஏற்புடைய சட்டங்களினால் வழங்கப்பட்ட பின்வரும் சட்டபூர்வமான அடிப்படைகளில் ஒன்றிற்கு அல்லது பலவற்றிற்கு அமைவாகவே நாம் பொதுவாக உங்களுடைய தனிப்பட்ட தரவுகளைச் செயற்படுத்துகின்றோம்:

  • ஒப்பந்தம்: ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றும்போது
  • சட்டரீதியான கடப்பாடு: ஏற்புடைய சட்டத்தினால் தேவைப்படுத்தப்படும்போது
  • சட்டபூர்வமான அக்கறை: எமது வாடிக்கையாளர் என்ற முறையில் உங்களுக்குச் சேவையாற்றும் எமது சட்டபூர்வமான அக்கரை
  • வெளிப்படையாக பகிரங்கப்படுத்தப்பட்ட தரவுகள்
  • சட்டபூர்வமான உரிமைக்கோரல்களைப் பாதுகாத்தல்
  • புள்ளிவிபர நோக்கங்கள்

3. உங்கள் தகவல்களை நாம் எப்படி பயன்படுத்துகின்றோம்?

நாம் உங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பின்வருவன உள்ளிட்ட (ஆனால் அவை மட்டுமல்ல) நோக்கங்களுக்குப் பயன்படுத்தக்கூடும்:

(A) வாடிக்கையாளர்களுக்கு:

  • நிதிச் சேவைகளை வழங்குதல்: உங்கள் கணக்குகளை நிர்வகித்தல், கொடுக்கல் வாங்கல்களைச் செயற்படுத்துதல் மற்றும் வங்கிச் சேவைகளை வழங்குதல் முதலியன.
  • வேறு சேவைகளை வழங்குதல்: விபரக்கூற்றுகளை அச்சிடுதல், அட்டைகளில் புடைப்பு பொறித்தல் மற்றும் அஞ்சல் விநியோக சேவைகள் முதலியன.
  • •சட்டக் கடமைகளுக்கான இணக்கப்பாடு: பணம் தூயதாக்கல் எதிர்ப்பு, மோசடித் தடுப்பு போன்ற சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைப்படுத்தல்களுக்கு இணங்கியொழுகுதல் முதலியன.
  • சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல்கள்: எமது வங்கி வசதிகள், சேவைகள் மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தகவல்களை அனுப்புதல் முதலியன.
  • எமது சேவைகளை முன்னேற்றுதல்: எமது வலைத்தளங்கள், வங்கி வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்களை பகுப்பாய்வு செய்து மேம்படுத்துதல் முதலியன.
  • வாடிக்கையாளருக்கான உதவி: வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, உங்கள் விசாரணைகள் வேண்டுகோள்கள் தொடர்பில் உதவுதல் முதலியன.
  • தன்னியக்கமாக தீர்மானம் எடுத்தல்: தன்னியக்க தீர்மானங்களுக்கு வசதியளிக்கவும் அவற்றைப் பிரயோகிக்கவும் தரவு பகுப்பாய்வு, விபரத்தொகுப்பு மற்றும் நடத்தைப் பகுப்பாய்வு, தொடர்பாடல் மற்றும் செயன்முறைகளை மேம்படுத்துதல் முதலியன.
  • உங்களையும் எமது மக்களையும் பாதுகாப்பாக வைத்திருத்தல்: கட்டட நுழைவுக்காக அடையாள உறுதிப்படுத்தல் மற்றும் பாதுகாப்புச் சோதனைகளை நடத்துதல், மோசடி மற்றும் அல்லது திருட்டு போன்ற ஏனைய குற்றங்களைக் கண்டுபிடிக்கும் மற்றும் தடுக்கும் நோக்கங்களுக்காகயும் வேறு உடல்நல மற்றும் பாதுகாப்பு இணக்கப்பாட்டு நோக்கங்களுக்காகவும் எமது வளாகம் மற்றும் ATM கூடங்களில் CCTV கண்காணிப்பு பதிவுகளைப் பயன்படுத்துதல் முதலியன.
  • பொது நன்மை: குற்றச்செயல்களைத் தடுக்கும் அல்லது கண்டுபிடிக்கும்நோக்கம் முதலியன.

    (B) தொழில் மனுதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு:
    மேலே 3(A)இல் தெரிவிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்கு மேலதிகமாக, பின்வருவன உள்ளிட்ட (ஆனால் அவை மட்டுமல்ல) நோக்கங்களுக்கும் நாம் உங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தக்கூடும்:
    •தொழில் விண்ணப்பங்களைச் செயற்படுத்துதல்: விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்தல், விண்ணப்பிக்கப்பட்ட தொழில் பணி அல்லது ஈடுபாட்டிற்பான திறன்கள், தகைமைகள் மற்றும் பொருத்தத்தை (மனோதத்துவ பரிசோதனைப் பெறுபேறுகள் உட்பட) மதிப்பீடு செய்தல், தொழிலுக்கு முந்திய அல்லது ஈடுபாட்டிற்கு முந்திய ஆய்வுகளை மேற்கொள்ளுதல், அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குப் பின்னணிச் சோதனைகளை நடத்துதல் மற்றும் பரிந்துரையாளர்களைப் பெற்றுக்கொள்ளுதல் முதலியன.
    •தொடர்பாடல்கள்: உங்கள் விண்ணப்பம் தொடர்பாக உங்களுடன் உங்களுடன் தொடர்பாடல் செய்தல். உங்களுக்குப் பொருந்தக்கூடியவையென நாம் கருதும் வேறு சாத்தியமான தொழில் வாய்ப்புகள் அல்லது பதவி வெற்றிடங்கள் பற்றியும் நாம் உங்களுக்கு அறிவிக்கக்கூடும்.
    •எமது விண்ணப்பதாரர் தேர்வு நடைமுறைகள் மற்றும் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மேம்படுத்துதல்: நிர்வாகப் பணிகளைச் செய்தல், இடர் முகாமைத்துவ நடவடிக்கைகள், வியாபாரச் செயற்பாடுகளைத் தணிக்கை செய்தல் முதலியன.
    கவனிக்கவும்: எமது சட்ட மற்றும் ஒழுங்குமுறைக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமானதென நாம் கருதும் மற்றும்Æஅல்லது தேவைப்படும் தனிப்பட்ட தரவுகளை நீங்கள் எமக்கு வழங்காவிட்டால் அல்லது நாம் அவற்றைச் செயற்படுத்துவதை விரும்பாவிட்டால், உங்கள் தொழில் விண்ணப்பத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க எமக்கு முடியாது போகலாம்.

4. தரவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல்

மேலே 3(A) மற்றும் 3(B) இல் தெரிவிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக அல்லது சட்டத்தின் தேவைப்படுத்தல் அல்லது ஏதேனும் அதிகார அமைப்பொன்றின் வேண்டுகோள் பிரகாரம், நாம் உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை HNB மற்றும் அதன் குழுமம், எமது ஆலோசகர்கள், சேவை வழங்குநர்கள், வியாபாரப் பங்காளிகள் மற்றும் மூன்றாம் தரப்பினர்களுடன் (அவர்களின் ஊழியர்கள், உப ஒப்பந்தகாரர்கள், சேவை வழங்குநர்கள், பணிப்பாளர்கள், அதிகாரிகள் போன்றவர்களும் உட்படுவர்) பகிர்ந்துகொள்ளக்கூடும். தரவுப் பகிர்வு மற்றும் தேச எல்லை தாண்டிய பரிமாற்றங்களுக்கு ஏற்புடைய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு அமைவாக, சேவைகளின் தன்மை மற்றும் எம்முடனான உங்கள் வங்கிச் சேவை உறவுகளின் தேவைகளைப் பொறுத்து, உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுடன் நாம் பகிர்ந்துகொள்ளக்கூடும்.

உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாம் எப்படி, யாருடன் பகிர்ந்துகொள்கின்றோம் என்பதை நாம் வரையறை செய்கின்றோம். அத்துடன், பகிரப்படும் தனிப்பட்ட தரவுகள் இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்படுவதை உறுதிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கின்றோம்.
உங்கள் வங்கிச் சேவை உறவு மற்றும் ஒரு தனிநபர் என்ற முறையில் நீங்கள் எம்முடன் பேணும் தொடர்புகளைப் பொறுத்து உங்கள் தனிப்பட்ட தரவுகள் பகிர்ந்துகொள்ளப்படும் தரப்புகள் வேறுபடலாம். உங்கள் ஒப்புதல், சட்டப்படி அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் அல்லது அத்தகைய பகிர்வு குறித்து நாம் உங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தால் அன்றி, உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாம் யாருக்கும் வெளியிட மாட்டோம்.

நாம் உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை பின்வருவன உள்ளிட்ட தரப்புகளுடன் (ஆனால், அவை மட்டுமல்ல) பகிர்ந்துகொள்ளக்கூடும்:

  • HNB மற்றும் அதன் குழுமம் 
  • எமது ஆலோசகர்கள்
  • எமது சேவைப் பங்காளிகள் / வழங்குநர்கள்
  • மூன்றாம் தரப்பு வியாபாரப் பங்காளிகள்
  • அரசாங்க மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகள்
  • CRIB மற்றும் தொடர்புடைய ஏனைய அமைப்புகள்

5. தரவுகளைக் களஞ்சியப்படுத்துதல்

நாம் உங்களுடைய தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்து, தேவையைப் பொறுத்து, இலத்திரனியல் வடிவத்தில் அல்லது அச்சு வடிவத்தில் களஞ்சியப்படுத்தி வைப்போம். எமது செயன்முறைகளை மற்றும் வியாபாரச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காகவும் ஆதரிப்பதற்காகவும் சட்ட மற்றும் ஒழுங்குமுறைக் கடமைகளுக்கு இணங்கி நடப்பதற்காகவும், நாம் உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை ர் HNB மற்றும் அதன் குழுமத்திற்குள்ளும் ஏனைய மூன்றாம் தரப்புகளுடனும் களஞ்சியப்படுத்த, பகிர்ந்துகொள்ள மற்றும் பரிமாற்றம் செய்ய முடியும். இதில், மூன்றாம் தரப்பு இணையத்தளத்தில் களஞ்சியப்படுத்துதல் (Cloud Storage), இலங்கைக்கு வெளியே வேறு விதமான தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் நிலவும் நியாயாதிக்கங்களுக்கான தேச எல்லை தாண்டிய பரிமாற்றங்கள் என்பனவும் உட்படலாம். ஆனால், ஏற்புடைய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்க மாத்திரமே அவ்வாறு செய்யப்படும்.

6. தரவு தக்கவைப்பு

உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் எந்த நோக்கத்திற்காகச் சேகரிக்கப்பட்டனவோ அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அவசியப்படும் காலம் வரையும் ஏற்புடைய சட்டங்கள் மற்றும் பிரமாணங்களுக்கு அமைவாகவும் மாத்திரமே நாம் அத் தரவுகளை தக்கவைத்திருப்போம். குறிப்பான தக்கவைப்புக் காலம் தரவுகளின் வகை மற்றும் சட்டம் அல்லது சட்டரீதியான தேவைப்படுத்தல்களைப் பொறுத்து வேறுபடலாம். ஆனால், பொதுவான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:

  • கணக்கு மற்றும் கொடுக்கல் வாங்கல்களின் முகாமைத்துவத்திற்குத் தேவையான தனிப்பட்ட தரவுகள், எம்முடனான உங்கள் வங்கிச் சேவை உறவு நீடித்திருக்கும் காலம் வரைக்கும், அதன் பின்னர் உரிய நிதிப் பிரமாணங்களினால் அல்லது உங்களுடனான எமது உறவு தொடர்பான எமது நியாயமான நலன்களினால் தேவைப்படுத்தப்படும் குறைந்தபட்ச காலத்திற்கும் தக்கவைக்கப்படும்.
  • சட்ட மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்திற்காக சேகரிக்கப்படும் தரவுகள், குறிப்பிட்ட சட்டத் தேவைகள் மற்றும் தொழிற்றுறை தரநியமங்களுக்கு அமைவாகத் தக்கவைக்கப்படும்.
  • சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பாடல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் தகவல்கள், நீங்கள் உங்களுடைய ஒப்புதலை மீளப்பெறும் வரை அழிப்பைக் கோரும் வரை, ஏற்புடைய சட்டங்களுக்கு உட்பட்டதாக தக்கவைக்கப்படும்.

எமது கொள்கை மற்றும் ஏற்புடைய பிரமாணங்களுடனான இணக்கப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக, நாம் எமது தரவு தக்கவைப்பு நடைமுறைகளைக் கிரமமான முறையில் மீளாய்வு செய்கின்றோம். தக்கவைப்புக் காலம் முடிவடைந்த பின்னர், 2022ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் (திருத்தப்பட்டபடி) கீழ் உருவாக்கப்பட்ட தரவு பாதுகாப்பு அதிகார அமைப்பினால் (இனிமேல் இது “DPA”) என்று குறிப்பிடப்படும்) வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் பிரகாரம், உங்கள் தனிப்பட்ட தரவை நாம் பாதுகாப்பாகவும் நிரந்தரமாகவும் நீக்கிவிடுவோம் அல்லது அதற்குப் புனைபெயர் சூட்டுவோம்.

7. தரவு பாதுகாப்பு

உங்கள் தனிப்பட்ட தரவுகளின் அதிகாரமற்ற அணுகல், வெளிப்படுத்தல், மாற்றம் அல்லது அழிவில் இருந்து பாதுகாப்பதற்கு போதுமான தொழில்நுட்ப, பௌதிக மற்றும் நிறுவன ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் செயற்படுத்துகின்றோம். எமது நடைமுறைகள் யாவும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்குவதையும் நாம் உறுதி செய்கின்றோம். நாம் எமது தனியுரிமை மற்றும் பாதுகாப்புத் ததரநியமங்களைக் கடைப்பிடிக்குமாறு எமது ஊழியர்களைக் கோருவதோடு, அது  தொடர்பில் அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கின்றோம். மேலும், எமது சார்பில் ஏதேனும் பணியைமேற்கொள்ளும் எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் பொருத்தமானஇணக்கப்பாட்டுத் தரநியமங்களுக்கு இணங்கி நடக்க வேண்டுமென நாம் கோருவோம். அத்தகைய தரநியமங்களுள் ஏதேனும் தகவலைப் பாதுகாப்பதற்கான கடப்பாடுகள், தகவல்களின் பயன்பாடுமற்றும் பரிமாற்றம் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளைப் பிரயோகித்தல் என்பன உள்ளடங்கும்.

8. மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள்

எமது துணை நிறுவனங்களின் சில வலைத்தளங்கள் தத்தமக்குரிய தனியுரிமை மற்றும் தகவல் கையாளுதல் நடைமுறைகளைக் கொண்டுள்ளன. அத் துறை நிறுவனங்கள் உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை எவ்வாறு கையாளுகின்றன என்பதை அறிய, அவற்றின் ஏற்புடைய தனியுரிமை அறிவிப்புகளைப் பார்க்கவும்.

எமது விளம்பரங்கள் காட்சிக்கு வைக்கப்படும் ஏனைய மூ ன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கு அல்லது நாம் இயக்காத / கட்டுப்படுத்தாத இணைக்கப்பட்ட ஏனைய மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கு எமது தனியுரிமை அறிப்பு பொருந்தாது. எனினும், எமது வலைத்தளங்கள் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கான இணைப்புகளைக் கொண்டிருக்கலாம். அத்தகைய இணைப்புகள் உங்கள் வசதிக்காக வழங்கப்பட்டாலும், இணைக்கப்பட்ட வலைத்தளங்களின் தகவல் கையாளுதல் நடைமுறைகள் எங்களுடையதைப் போலவே இருக்காது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த வலைமைப்புகள் அவற்றின் சொந்த தனியுரிமை அறிவிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். இதன் மூலம் அவை உங்கள் தனிப்பட்ட தரவுகளையும் உங்கள் உரிமைகளையும் எவ்வாறு சேகரித்துச் செயற்படுத்துகின்றன என்பதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும்.

9. உங்கள் உரிமைகள்

ஏற்புடைய சட்டங்களுக்கு உட்பட்டு, உங்கள் தனிப்பட்ட தரவுகள் தொடர்பாக உங்களுக்குப் பின்வரும் உரிமைகள் உள்ளன:

  • அணுகல் உரிமை : உங்களைப் பற்றி நாம் வைத்திருக்கும் தகவல்களை அணுகவும், அவற்றை நாம் எவ்வாறு செயற்படுத்துகின்றோம் என்பது பற்றியதகவல்களைப் பெறவும் கொண்டுள்ள உரிமை.
  • திருத்தம் அல்லது நிறைவு செய்வதற்கான உரிமை : உங்கள் தகவல் தவறானதாக அல்லது முழுமையற்றதாக இருந்தால் அதனைத் திருத்தும்படி கோருதல்.
  • தன்னியக்கமான தீர்மானமொன்றை மீளாய்வு செய்யக் கோரும் உரிமை : தன்னியக்க செயன்முறையின் மூலம் எடுக்கப்பட்ட ஒரு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கோருதல்.
  • அழிக்கும் உரிமை : சில சூழ்நிலைகளில் உங்கள் தகவல்களை அழித்துவிடக் கோருதல்.
  • உங்கள் தகவல்களை அழிக்க நீங்கள் தெரிவுசெய்தாலும், அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள எமக்குச் சட்டபூர்வமான வேறு காரணம் இருந்தால்மற்றும் அவ்வாறு செய்ய எமக்கு உரிமை இருந்தால் அல்லதுதேவைப்படுத்தப்பட்டால், நாம் உங்கள் தகவல்களைத் தொடர்ந்துதக்கவைத்துக்கொள்ளலாம் என்பதைத் தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும்.
  • ஒப்புதலைத் திரும்பப் பெறுவதற்கும் செயற்படுத்துதலை ஆட்சேபிப்பதற்குமான உரிமை : சில சூழ்நிலைகளில், உங்கள் தகவல்களைச் செயற்படுத்துவதற்கான உங்கள் ஒப்புதலை நீங்கள் மீளப்பெறலாம்.
  • நீங்கள் உங்களுடைய ஒப்புதலை மீளப்பெற்றாலும், உங்கள் தகவல்களைச் செயற்படுத்த எமக்குச் சட்டபூர்வமான வேறு காரணம் இருந்தால் நாம் அவற்றைத் தொடர்ந்து செயற்படுத்த முடியும் என்பதைத் தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும். ஒப்புதலைத் மீளப்பெறுதல், எமது வங்கி வசதிகள் மற்றும் சேவைகளை தொடர்ந்து அணுகுவதற்கான உங்கள் இயலுமையையும் பாதிக்கக்கூடும்.
  • மேல்முறையீடு செய்யும் உரிமை : உங்கள் தரவு வி டய உரிமைகளை பிரயோகிப்பதற்கான கோரிக்கை தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக நீங்கள் தரவு பாதுகாப்பு அதிகார அமைப்பிடம் முறைப்பாடொன்றை அல்லது மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம்.

இந்த உரிமைகளைப் பயன்படுத்த, எங்கள் வாடிக்கையாளர் சேவை ஹாட்லைனைத் தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் தரவு குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி எங்கள் தரவு பாதுகாப்பு அதிகாரியை ("DPO") தொடர்பு கொள்ளவும்.

10. இத் தனியுரிமை அறிவிப்புக்கான மாற்றங்கள்

எமது நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிப்பதற்காக அல்லது சட்ட மற்றும் ஒழுங்குமுறைக் காரணங்களுக்காக, இத் தனியுரிமை அறிவிப்பை நாம் காலத்திற்குக் காலம் புதுப்பிக்கக்கூடும். நீங்கள் பார்வையிடுவதற்கு வசதியாக எமது தனியுரிமை அறிவிப்பு www.hnb.lk என்ற வலைத்தளத்தில் கிடைக்கின்றது. சமீபத்திய தகவல்களுக்கு இடைக்கிடையே இந்த வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

11. எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்

உங்களுக்கு ஏதேனும் மேலதிக தகவல் தேவைப்பட்டால் அல்லது எமது தரவு பாதுகாப்பு அலுவலருடள் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால்.

  • வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் ஊடாக எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

இத் தனியுரிமை அறிவிப்பு அல்லது உங்கள் தனிப்பட்ட தரவுகள் தொடர்பில் ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், அதற்கான தொடர்பு வழிகள்:

தொடர்பு எண்: +94 112 462462
மின்னஞ்சல்: hnbconnect@hnb.lk
முகவரி:
வாடிக்கையாளர் அனுபவ பிரதானி,
HNB டவர்ஸ், மாடி 19,
இல.479, ரீ.பீ. ஜாயா மாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை.

  • எமது தரவு பாதுகாப்பு அலுவலருடள் (DPO) தொடர்புகொள்ளுங்கள்

உங்கள் தனிப்பட்ட தரவுகள் அல்லது இத் தனியுரிமை அறிவிப்பு தொடர்பில் ஏதேனும் கேள்விகள் அல்லது விசாரணைகள் இருந்தால் மற்றும் எமது தரவு பாதுகாப்பு அலுவலருடள் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால். அதற்கான தொடர்பு வழிகள்:

மின்னஞ்சல்: DPO@hnb.lk
முகவரி:
தரவு பாதுகாப்பு அலுவலர்,
HNB டவர்ஸ்,
மாடி 19, இல.479,
ரீ.பீ. ஜாயா மாவத்தை,·கொழும்பு 10,
இலங்கை.