Skip to main content

1. அறிமுகம்

HNBயின் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம். குக்கீஸ் மற்றும் உங்கள் இணைய உலாவல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான அது போன்ற தொழில்நுட்பங்களை நாம் எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதைப் பற்றி இந்த குக்கீஸ் கொள்கை விளக்கம் அளிக்கின்றது. நீங்கள் எமது வலைத்தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இக் கொள்கையில் விபரிக்கப்பட்டுள்ள குக்கீஸின் உபயோகத்திற்குச் சம்மதிக்கின்றீர்கள்.

2. குக்கீஸ் என்றால் என்ன?

குக்கீஸ் என்பவை நீங்கள் ஒரு வலைத்தளத்தில் பிரவேசிக்கும்போது உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும் சிறிய உரைக் கோப்புகள் ஆகும்.

அவை, உங்கள் சாதனத்தை வலைத்தளம் அடையாளம் காணவும் உங்கள் விருப்பத்தேர்வுகள் மற்றும் அமைப்புகள் போன்ற உங்கள் பிரவேசம் பற்றிய தகவல்களை நினைவில் கொள்ளவும் உதவுகின்றன.

3. நாம் குக்கீஸை பயன்படுத்துவது எப்படி?

நாம் பின்வரும் நோக்கங்களுக்காக குக்கீஸை பயன்படுத்துகின்றோம்:

  • எமது வலைத்தளத்தின் சரியான செயற்பாட்டை உறுதி செய்வதற்கு
  • எமது தளத்தின் செயற்றிறனைப் பகுப்பாய்வு செய்து மேம்படுத்துவதற்கு
  • உங்கள் விருப்பத்தேர்வுகளை நினைவில் வைத்திருப்பதன் மூலம் உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்கம் செய்வதற்கு
  • உங்கள் அக்கறைகளின் அடிப்படையில், இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை வழங்குவதற்கு

4. நாம் பயன்படுத்தும் குக்கீஸ் வகைகள்

அத்தியாவசிய குக்கீஸ்: இந்த குக்கீஸ், எமது வலைத்தளத்தின் சரியான செயற்பாட்டிற்கு அவசியமானவை. அவை, பக்கங்களை வழிச்செலுத்துதல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான அணுகல் போன்ற அடிப்படை அம்சங்களைச் செயற்படுத்துகின்றன.

பகுப்பாய்வு/செயற்றிறன் குக்கீஸ்: இந்த குக்கீஸ், பார்வையாளர்கள் எமதுவலைத்தளத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை பகுப்பாய்வு செய்ய எமக்கு இடமளிக்கின்றன. பயன்படுத்துபவரின் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் எமது தளத்தின் செயற்றிறனை அதிகபட்சப்படுத்துல் போன்றவற்றிற்கு நாம் இத் தகவல்களைப் பயன்படுத்துகின்றோம்.

செயற்பாட்டு குக்கீஸ்: இந்த குக்கீஸ், உங்கள் விருப்பங்களையும் தேர்வுகளையும் நினைவிற்கொள்ளுதல் போன்ற மேம்படுத்தப்பட் செயற்பாடு மற்றும் தனிப்பயனாக்கத்திற்கு இடமளிக்கின்றன

5. மூன்றாம் தரப்பு குக்கீஸ்

எமது வலைத்தளத்திலுள்ள சில குக்கீஸ் மூன்றாம் தரப்பு சேவைகளினாலட அமைக்கப்படக்கூடும். இந்த குக்கீஸ் மீது எமக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. அவை, அவற்றை வழங்கும் மூன்றாம் தரப்பினரின் தனியுரிமைக் கொள்கைகளுக்கு உட்பட்டவை.

6. குக்கீஸ் முகாமைத்துவம்

உங்கள் உலாவி அமைப்புகள் மூலம் நீங்கள் உங்களுடைய குக்கீ விருப்பங்களை நிர்வகிக்க முடியும். பெரும்பாலான உலாவிகள் குக்கீகளை மறுக்க அல்லது ஏற்றுக்கொள்ளவும் அவற்றை நீக்கவும் உங்களுக்கு இடமளிக்கின்றன. உங்கள் உலாவியிலுள்ள "Help" பிரிவு உங்கள் குக்கீ அமைப்புகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றிய தகவல்களை வழங்குகின்றது. நீங்கள் அனைத்துக் குக்கீகளையும் மறுத்தால், எமது வலைத்தளத்தைப் பயன்படுத்த முடியாமற்போகலாம் என்பதைத் தயவுசெய்து நினைவிற்கொள்ளவும்.

7. இந்த குக்கீஸ் கொள்கைக்கான மாற்றங்கள்

எமது நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்க அல்லது வேறு செயற்பாட்டு, சட்ட அல்லது ஒழுங்குமுறை காரணங்களுக்காக இந்த குக்கீ கொள்கையை நாம் புதுப்பிக்கக்கூடும். எமது குக்கீ கொள்கை உங்கள் பார்வைக்காக www.hnb.lk என்ற வலைத்தளத்தில் கிடைக்கின்றது. அதன் சமீபத்திய பதிப்பிற்கு அடிக்கடி இந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்.

8. எங்களைத் தொடர்பு கொள்ளவும்

உங்களுக்கு ஏதேனும் மேலதிக தகவல் தேவைப்பட்டால் அல்லது எமது தரவு பாதுகாப்பு அலுவலருடன் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால்,

  • வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் ஊடாக எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

இத் தனியுரிமை அறிவிப்பு அல்லது உங்கள் தனிப்பட்ட தரவுகள் தொடர்பில் ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், அதற்கான தொடர்பு வழிகள்:

தொலைபேசி: +94 112 462462
மின்னஞ்சல்: hnbconnect@hnb.lk
முகவரி:வாடிக்கையாளர் அனுபவ பிரதானி,
HNB டவர்ஸ், மாடி 19,
இல.479, ரீ.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு 10,
இலங்கை.

  • எமது தரவு பாதுகாப்பு அலுவலருடள் (DPO) தொடர்புகொள்ளுங்கள்

உங்கள் தனிப்பட்ட தரவுகள் அல்லது இத் தனியுரிமை அறிவிப்பு தொடர்பில் ஏதேனும் கேள்விகள் அல்லது விசாரணைகள் இருந்தால் மற்றும் எமது தரவு பாதுகாப்பு அலுவலருடள் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால். அதற்கான தொடர்பு வழிகள்: மின்னஞ்சல்: DPO@hnb.lk
முகவரி::
தரவு பாதுகாப்பு அலுவலர்,
HNB டவர்ஸ், மாடி 19,
இல.479, ரீ.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு 10,
இலங்கை.